தனக்கு  நடிகர் விஜய் சேதுபதியை திருமணம் செய்து கொள்ளவும், நடிகர் ஹரிஸ் கல்யாணுடன் டேட் செய்யவும் ஆசைப்படுவதாகவும் நடிகை மகிமா நம்பியார் தெரிவித்துள்ளார். 


தமிழில் சாட்டை திரைப்படத்தில் அறிவழகியாக அறிமுகமானவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை மகிமா நம்பியார். சாட்டை படத்தினைத் தொடர்ந்து 15 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தான் நடித்த படங்களில் தனக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டவர் மகிமா நம்பியார். அண்மையில் அவர் அளித்த போட்டியில் மனம் திறந்து கூறியதாவது, 


 "ஒரு கதாபாத்திரத்தினை தேர்வு செய்வதற்கு முன்னர் எபோதும் தனக்கு இந்த கதாபாத்திரம் சரிவருமா என்பதை விட, இதனை மக்கள் வரவேற்பார்களா என யோசித்து தேர்வு செய்வேன். எல்லா வகையான கதாபாத்திரங்களையும் நடிக்க ஒரு நடிகர் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். எனக்கு எப்போதும் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில் உடன்பாடு இல்லை. அதனால் தான் படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். நடிக்கவும் ஆவலாக இருக்கிறேன். நான் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நன்றாக நடிக்கிறேன் என்றால் அதற்கு, எனது அண்ணன் தான் காரணம். அவர்தான் எனக்கு புகை பிடிக்க கற்றுக் கொடுத்தார். எனக்கு எனது அண்ணன் புகைபிடிக்கச் சொல்லித் தரும் போது எனது பெற்றோர்கள் உடன் இருந்தனர். 


சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் இருந்த என்னுடைய நீண்ட நாள் ஆசை நடிகர் மம்மூட்டியை பார்க்க வேண்டும் என்பது. நாங்கள் இருவரும் ஒரே படத்தில் நடித்தும் படப்பிடிப்பின் போது பார்க்க முடியவில்லை. படத்தின் டப்பிங்கின் போதும் கூட பார்க்க முடியவில்லை. கடைசியாக படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டத்தில் பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு படத்திற்கும் மற்றொரு படத்திற்குமான இடைவெளி எவ்வளவு காலமாக இருந்தாலும் படம், நல்ல படமாக இருந்தால் மக்கள் படத்தையும், நடிகர்களையும் எப்போதும் அங்கீகரிக்க தவறுவதில்லை என்பதை நான் நம்புகிறேன். 


நான் இப்போதும் சிங்கிள் தான். மிங்கிள் ஆக முயற்சி செய்துகொண்டு இருக்கிறேன். எனக்கு கிரஷ் என்றால் அது அஜித் சார் தான். ஆனால் சீக்ரெட் கிரஷ் என்றால் அது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான். என்னுடைய அம்மாவிடம் அடிக்கடி சொல்லுவேன், ‘ விஜய் சேதுபதியை திருமணம் செய்துகொள்ள ஆசை என’. அதேநேரத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் டேட் செய்ய ஆசை. மகேஷ் பாபு மாதிரி குணமுள்ளவர் தான் கணவனாக வேண்டும்” இவ்வாறு நடிகை மகிமா நம்பியார் மனம் திறந்து  கூறியுள்ளார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண