விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலம் 2017ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியை கடந்த ஐந்து ஆண்டுகளாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இதில் ராஜு ஜெயமோகன், இமான் அண்ணாச்சி, பிரியங்கா, தாமரை செல்வி, அக்ஷரா, நிரூப், சிபி சந்திரன், வருண் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக பங்கேற்றனர். அமீர், சஞ்சீவ் உள்ளிட்டோர் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றனர்.
இவர்களில் ராஜு, பிரியங்கா, பாவ்னி, அமீர், நிரூப் ஆகிய ஐந்து பேரும் இறுதி போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த ஐந்து பேரில் ராஜு ஜெயமோகன் டைட்டில் வின்னராகவும், பிரியங்கா ரன்னராகவும் வெற்றி பெற்றனர். இதனையடுத்து ராஜுவுக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் வெற்றிக்கு பிறகு ராஜு ஜெயமோகன் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது வாழ்வு குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அந்தப் பேட்டியில் பேசிய ராஜு, “பிக் பாஸுக்கு முன் நான் கனா காணும் காலங்கள் நாடகத்தில் நடித்தேன். அதற்கும் முன் உதவி இயக்குநராக இருந்தேன். பிறகு இயக்குநர் நெல்சனுடன் 5 வருடங்கள் பணிபுரிந்தேன். இசை வெளியீட்டு விழாவுக்கு ஸ்க்ரிப்ட் எழுதி கொடுத்தேன். பின் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்தேன்.
இன்னும் நான் நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் படம் பார்க்கவில்லை. அதைவிட முக்கியம் நெல்சனின் டாக்டர் படம் பார்க்க வேண்டும். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் வலிமை படம் பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் வெளியாகவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா கலந்துகொள்வார் என்று எனக்கு முன்பே தெரியும். மற்ற பங்கேற்பாளர்கள் பற்றி எனக்கு முன்னரே தெரியாது.
பாவ்னி கடந்துவந்த பாதை எனக்கு பிடித்திருந்தது. தான் கடந்து வந்த பாதையை இமான் அண்ணாச்சி சொன்ன விதம் எனக்கு பிடித்திருந்தது. முக்கியமாக நமீதா மாரிமுத்துவின் கதை. அவரின் கதையை சிரித்துக்கொண்டு சொல்ல முடியாது. அது ரொம்பவும் ஆழமான கதை” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்