தங்கள் வாழ்க்கை போராட்டத்தில் ஷகிலாவும், மிளாவும் ஒருவருக்கொருவர் ஆதரவாய் இருந்துள்ளனர்.  அதன் பின்னர் மிளா பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்ட தொடங்கினர். அப்போது தான் மிளா யார் என்று ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நடிகை ஷகீலா, "இது என்னுடைய மகள் மிளா. இவர் இல்லையென்றால் என்னுடைய வாழ்க்கையில் எதுவுமே இல்லை. என்னுடைய நிறைய ஏற்றத்தாழ்வுகளில் எனக்கு துணையாக இருந்தவர். அதேபோல் அவருடைய ஏற்றத் தாழ்வுகளிலும் நான் துணையாக இருந்திருக்கிறேன்" என்று கூறியிருந்தார். அதன் பின்பு மிளாவை பல யூடியூப் சேனல்கள் பேட்டி எடுத்தனர். அவரை பற்றியும் வலி நிறைந்த அவரின் திருநங்கை வாழ்க்கை பற்றியும் வெளியில் தெரிய வந்தது. இப்போது படித்து முடித்து ஆடை வடிவமைப்பாளராக மிகச் சிறந்த பணியை செய்து வருகிறார் மிளா. பல திருநங்கைகளுக்கு முன்னுதாரணமாகவும் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் விஜய் டிவியில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் 5 நிகழ்ச்சியிலும் மிளா கலந்து கொள்ள போகிறார் என பல தகவல்கள் பரவின. கடைசியில் நமீதா மாரிமுத்து பிக் பாஸ் வீட்டுக்குள் போனார். அனைத்து திருநங்கைகளின் சார்பாக தான் நமீதா பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருப்பதாக மிளா பெருமையாக கூறி இருந்தார்.






குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஷகிலாவுக்கு வேறொரு முகத்தை பெற்றுத்தந்தது. அதே போல அந்த ஷோவில் அவரது மகள் மிளாவும் ஒரே ஒரு எபிசோடில் வந்து புகழடைந்தார். அதன்மூலம் திருநங்கைகளின் மீதான பிம்பத்தையும் சாதாரண மக்களிடையே மாற்றியமைத்தது நிகழ்ச்சி. ஷகீலா, மிளாவை தத்தெடுத்து வளர்ப்பது 'குக் வித் கோமாளி 2' நிகழ்ச்சி மூலம் தான் அனைவருக்கும் தெரிய வந்தது. ஆடை வடிவமைப்பாளரான மிளா அதன் பின்னர் ஷகீலாவுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளிட்டார். பின்னர் பிரபலம் ஆனதால் மிளாவின் யூட்யூப் சேனல் ஹிட் ஆனது. மாடலிங் துறையில் நல்ல மார்க்கெட் உருவாக பிஸியானர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு, ஷகிலா இன்ஸ்டாகிராமில் மிளாவின் புகைப்படங்களை நீக்கியது பரபரப்பாக பேசப்பட்டது. அது குறித்து கேட்ட கேள்விக்கு மிளா பதிலளித்துள்ளார். தொடர்ந்து ஷூட்டிங் இருந்ததால், பல நாட்களாக ஷகிலாவை சந்திக்க முடியவில்லை என்றும், அவர் சந்திக்க அழைக்கும்போது, இவர் ஷூட்டிங்கில் இருந்ததும், இவர் அழைக்கும்போது அவர் பிசியாக இருந்ததும், இருவரும் சந்திப்பதை வெகுவாக குறைத்தது என்று கூறியிருக்கிறார்.






அவர் பேசுகையில், "எனக்கும் ஷகிலாம்மாவுக்கும் ஏதாவது பிரச்சனையா என்று கேட்டால் சத்தியமாக ஒன்றுமே இல்லை, ஆனால் அவர் எதற்காக என் புகைப்படங்ககை நீக்கினார் என்று கேட்டாலும் எனக்கு பதில் தெரியாது. நானே அவரிடம் கேட்டு விட்டேன், நாம் எடுத்துக்கொண்ட புகைப்படம்தானே முதலில் அந்த அக்கவுண்டில் பதிவிட்டது, அதுவே காணவில்லை என்றேன்… அதற்கு ,'என் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை வேறு யாரோ பயன்படுத்துகிறார்கள், எனக்கு தெரியாது என்று கூறிவிட்டார்'. அது யார் எனக்கு தெரிந்தே ஆகவேண்டும் என்று வற்புறுத்தும் ஆள் நானில்லை. என்னை பெற்ற பெற்றோர்களே என்னை வீட்டை விட்டு வெளியேறச்சொன்னால் நான் ,'ஏம்மா என்னை வெளிய போக சொல்றீங்க, நான் உங்க புள்ள தானேம்மா' என்று நான் கேட்கமாட்டேன். நான் கேட்டேன் அவர் வேறு யாரோ பயன்படுத்துவதாக கூறிவிட்டார், முடிந்துவிட்டது. இப்போது அவரோடு யாரோ சாஷா என்று ஒருவர் இருக்கிறாராம். எனக்கு அவரை பற்றியெல்லாம் பேச வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு ஷகிலாம்மாவை பற்றி பேசும் உரிமை உள்ளது. என்னை பேச சொன்னால் நாள் முழுதும் பேசுவேன். ஆனால் யாரோ ஒருவர் அவரோடு இருக்கிறார் என்றால் அது எனக்கு அவசியமில்லாதது. ஆனால் இந்த புகழ், இந்த மரியாதை, இந்த இடம் இது ஷகிலாம்மா தந்தது, அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்னுடைய புகைப்படம் இல்லாதது வருத்தம் தான். அந்த செய்தியை என்னுடைய செய்தி தொடர்பாளர் என்னிடம் போன் செய்து கூறியதும் நாடு ரோட்டில் என்ன செய்வதென்று தெரியாமல் உறைந்து போய் நின்று அழுதேன். ஆனால் போகட்டும் எவ்வளவோ பார்த்துவிட்டோம், இதையும் பார்த்துவிடலாம். ஷகிலாம்மாவின் இன்ஸ்டாகிராமில் என் புகைப்படம் இருப்பது எனக்கு ஒரு ஆசீர்வாதமான விஷயம், அதனை நான் இப்போது மிஸ் செய்கிறேன். அவருடைய இன்ஸ்டாகிராம் ஐடியை அவரே பயன்படுத்தவில்லை. சாஷா என்பவர் பயன்படுத்தலாம் என நினைக்கிறேன். எனக்கு தெரியவில்லை, ஆனால் முதல் இருபது படங்கள் அவருடைய படங்கள்தான் இருக்கிறது. அவருடைய விளம்பர பக்கம் போலத்தான் உள்ளது அது." என்று பதிலளித்தார்.