கன்னட நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் கேஜிஎப். பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என வெளியாகிய அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் இந்த படம் அடுத்த பாகத்திற்கான தொடர்ச்சியுடன் முடிக்கப்பட்டிருக்கும். இதனால், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டது.


இந்தநிலையில், கேஜிஎப் திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளதால், இணையத்தில் இந்த டிரெய்லர் குறித்துதான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்தசூழலில், கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் வெளியீடு விழாவில், நடிகர் விஜய் குறித்து நடிகர் யஷ் பேசியுள்ளார். அதில், அவர், இது தேர்தல் அல்ல, சினிமா. இது கேஜிஎப் VS பீஸ்ட்க்கான போட்டி அல்ல. நடிகர் விஜய் சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு, கண்டிப்பாக பீஸ்ட் படத்தை பார்ப்பேன். விஜய் சாரின் ரசிகர்கள் கண்டிப்பாக கேஜிஎப் இரண்டாம் பாகத்தை விரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். 



ஊரடங்கு, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதில் காலதாமதம் ஏற்பட்டது. இருப்பினும் இரண்டாண்டுகளாக தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு ஓரளவு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த நிலையில், கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வெளியீட்டு தேதியை தயாரிப்பு தரப்பு சமீபத்தில் அறிவித்தது. வரும் 2022ம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி இந்த படத்திற்கான இரண்டாம் பாகம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.


இந்த நிலையில், கடந்த வாரம் டிரெய்லர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்தது. அப்போதிலிருந்து டிரெய்லரை எதிர்நோக்கி அவரது ரசிகர்கள் காத்திருந்தனர். தற்போது, அனைவரும் எதிர்பார்த்த டிரெய்லர் சற்றுமுன் வெளியானது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் டிரெய்லர் வெளியாகியுள்ளது. தமிழில் நடிகர் சூர்யா டிரெய்லர் வெளியிட்டார். டிரெய்லர் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அடுத்து படம் எப்போது தியேட்டருக்கு வரும் என்ற எதிர்பார்ப்புடன் வெயிட்டிங்கில் இருக்கின்றனர்.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண