தான் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளேன் எனக் நடிகர் சிவகார்த்திகேயன் நினைவுகளை பகிர்ந்துள்ளார்


கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார், தற்போது  விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. நடிகர் ரஜினிகாந்தின் 169ஆவது படம் தொடர்பான தகவல்கள் தினம் தினம் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில்,  ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியானது. ரஜினி - நெல்சன் - அனிருத் கூட்டணியில் அமையும் இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ரஜினிகாந்த், நெல்சன், அனிருத் கூட்டணியில் உருவாகும் படம் குறித்த சன் பிக்சரிஸின் அறிவிப்பே சும்மா மாஸாக இருந்தது.




இந்நிலையில் நெல்சன் திலீப்குமார், சிவகார்த்திகேயன் நட்பு குறித்து ஃப்ளாஷ்பேக் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.


சிவகார்த்திகேயனும் நெல்சன் திலீப்குமாரும் நீண்ட கால நண்பர்கள். இது குறித்து டாக்டர் வெளியீட்டுக்குப் பின்னர் விருது விழா ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன். நெல்சன் எனது நீண்ட கால நண்பர். நான் ஆரம்பத்தில் நெல்சனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளேன். வேட்டை மன்னன் என்ற படத்தில் நான் அவருடைய உதவி இயக்குநர். நான் மட்டும் தான் உதவி இயக்குநர். எல்லாத்துக்கு என்னைத்தான் நிறைய திட்டுவார். படத்தில் விடிவி கணேஷ் அண்ணன் நடித்திருந்தார். அவரும் என்னைத் திட்டுவார். நானும் நெல்சனும் 2007ல் இருந்து நண்பர்.


கனா படத்தில் இவருடைய முழுப்பெயர் நெல்சன் திலீப்குமாரை தான் எனது கேரக்டருக்கு வைத்திருப்பார்கள். அந்தப்படத்தின் இயக்குநர் அருண்ராஜ் காமராஜாவும் நெல்சனுக்கு நண்பர் தான் அதனால் அந்தப் படத்தில் எனது கேரக்டருக்கு நெல்சன் திலீப்குமார் எனப் பெயர்வைக்கப்பட்டது என்றார்.


உடனே நெல்சன் குறுக்கிட்டு, அந்தத் தகவலை சொன்னவுடனேயே, சிவாவுக்கு என் மீது கோபமா, அருண்ராஜாவுக்கு என் மீது கோபமா என்று யோசித்தேன் என்று கூற அரங்கமே சிரிக்க அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.


நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா சூப்பர் டூப்பர் ஹிட். வித்தியாசமான கதைக்களத்தால் அந்தப் படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. சிவகார்த்திகேயனுன் ஒரு வித்தியாசமான கெட்டப்பாக அந்தப் படம் அமைந்தது. தற்போது விஜய் நடிப்பில் பீஸ்ட் உருவாகியுள்ளது. அது வெளியாவதற்கு முன்னரே சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் நெல்சனின் கைகளில் கிடைத்துவிட்டது.