காமன்வெல்த் போட்டியின் 6 வது நாளில் இந்தியாவிற்கு சிறந்த நாளாக அமைந்தது. நேற்றைய நாளில் மட்டும் 4 பதக்கங்களை கைப்பற்றி இருந்தது. மகளிர் ஹாக்கியில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆடவர் ஒற்றையர் ஸ்குவாஷில், சவுரவ் கோசல் இங்கிலாந்தின் ஜேம்ஸ் வில்ஸ்ட்ரோப்பை தோற்கடித்து, காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவின் முதல் ஒற்றையர் பதக்கத்தை வென்றார்.
தடகளப் போட்டியில் உயரம் தாண்டுதல் வீரர் தேஜஸ்வின் சங்கர் வெண்கலப் பதக்கத்தை வென்றார். காமன்வெல்த்தில் இந்தியர் ஒருவர் உயரம் தாண்டுதல் வென்ற முதல் பதக்கம் இதுவாகும். பளு தூக்குதல் போட்டியில், லவ்பிரீத் சிங் மற்றும் குர்தீப் சிங் ஆகியோர் முறையே ஆண்களுக்கான 109 கிலோ மற்றும் 109+ கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
இதன் மூலம் காமன்வெல்த் விளையாட்டு 2022 தொடரில் இந்திய அணி 18 பதக்கங்களை பெற்றுள்ளது. இந்த நிலையில், காமன்வெல்த் போட்டியின் 6வது நாள் முடிவில் பதக்க பட்டியலில் முதலிடத்தில் எந்த நாடு உள்ளது..? இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் ? என்பதை கீழே காணலாம்.
ரேங் | நாடுகள் | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
1 | ஆஸ்திரேலியா | 46 | 38 | 39 | 123 |
2 | இங்கிலாந்து | 39 | 37 | 28 | 104 |
3 | கனடா | 16 | 20 | 21 | 57 |
4 | நியூசிலாந்து | 15 | 10 | 10 | 35 |
5 | ஸ்காட்லாந்து | 7 | 8 | 17 | 32 |
6 | தென்னாப்பிரிக்கா | 6 | 6 | 7 | 19 |
7 | இந்தியா | 5 | 6 | 8 | 19 |
8 | வெல்ஸ் | 3 | 3 | 8 | 14 |
9 | மலேசியா | 3 | 2 | 3 | 8 |
10 | நைஜீரியா | 3 | 1 | 4 | 8 |
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்