ஆஸ்திரேலியா மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற இந்திய வம்சாவளியைச்சேர்ந்த ஐஸ்டின் நாராயணன், தனது சொந்த உணவகத்தை விரைவில் தொடங்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
உலகளவில் மிகவும் பிரபலமான சமையல் நிழ்ச்சிகளில் ஒன்று மாஸ்டர் செஃப். பல்வேறு நாடுகளில் பிரபலமாகி வரும் நிலையில், தமிழிலும் தற்போது ஒளிப்பரப்பாகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 27 வயதான ஜஸ்டின் நாராயணன் வெற்றி பெற்றார். இதோடு மட்டுமில்லாமல் இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் மதிப்பிலான 2,50,00 ஆஸ்திரேலியன் டாலரை பரிசுத்தொகையாக வென்றார். இந்த வெற்றிக்குறித்து பேசிய ஜஸ்டின் நாராயணன், இந்த சமையல் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவேன் என ஒருபோதும் நினைத்தது இல்லை என்றும் ஆனால் என் குடும்ப உறுப்பினர்களின் எதிர்ப்பார்ப்பினை நிறைவேற்றியதாக தெரிவித்திருந்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொண்டதாகவும் அவர் கூறியிருந்தார். மேலும் இந்த வெற்றியினைப் பெரிதாக கொண்டாடவில்லை என்றும், பல மணி நேரம் நன்றாக தூங்கினேன். அதன்பிறகு எனது மனைவியுடன் சிறிது நேரம் செலவிட்டேன் என்றும் இதனையடுத்து குடும்ப உறுப்பினர்கள் மட்டும் நண்பர்களுடன் இரவு நேர உணவிற்கு வெளியில் சென்றோம் என கூறினார். இது ஒரு எளிமையான கொண்டாட்டமாகவே அமைந்திருந்தது எனவும் ஜஸ்டின் நாராயணன் கூறினார்.
இதோடு இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முக்கியக்காரணம் நான் எனது தாத்தா மற்றும் பாட்டியுடன் சேர்ந்து பார்த்த சமையல் நிகழ்ச்சிகள் தான். இவை தான் என்னை சமைப்பதற்கான ஆர்வத்தினைத் தூண்டியது. இதோடு ஒவ்வொரு சமையல் நிகழ்ச்சிகளைப்பார்த்து வீட்டில் உள்ளவர்கள் மற்றும் நண்பர்களுக்கு சமைத்து தருவேன். இதனைக்கண்ட என்னுடைய உறவுகள் ஏன் நீ சமையல் நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் செல்லக்கூடாதா? என்று கேள்வி எழுப்பியதோடு மாஸ்டர் செஃப்“ நிகழ்ச்சிக்கு விண்ணப்பிக்க வைத்தனர். இதனையடுத்து அவர்களின் நம்பிக்கை மற்றும் என்னுடைய ஆர்வம் தான் இந்த நிகழ்ச்சியில் என்னை வெற்றி பெற வைத்தது எனக் கூறினார்.
மேலும் இந்த மாஸ்ட் செஃப் நிகழ்ச்சியின் வெற்றிக்குப்பின்னர், அடுத்து என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்? என்ற அனைவரின் கேள்விக்கு தற்போது பதிலளித்துள்ளார் ஜஸ்டின் நாராயணன். அதில் எனக்கென்று ஒரு சொந்த உணவகத்தைத் திறக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் அதற்கு முன்னதாக இன்னும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் அதிகளவில் உள்ளது என ஜஸ்டின் கூறுகிறார். மேலும் YouTube ல் பல வேடிக்கையான சமையல் வீடியோக்களை செய்து அப்லோட் செய்ய விரும்புவதாகம் அவர் கூறுகிறார். எனவே விரைவில் ஜஸ்டின் நாராணயன் உணவகம் பலருக்கு நல்ல விருத்தளிக்கும் விதமாக அமையவுள்ளது.
.