இது குறித்து தேவயானியின் கணவர் ராஜ்குமார் கூறும் போது, “விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தை பார்த்த விக்ரம் இந்தப்படம் எனக்கு சுத்தமாக பிடிக்க வில்லை என்று பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார். அது ஏன் என்று இப்போது வரைக்கும் எனக்கு தெரியவில்லை. விஜய் 100 படம் நடிச்சா கூட பூவே உனக்காக அமைத்துக்கொடுத்த ப்ளாட்ஃபார்மில் தான் அவர் நடந்து கொண்டிருக்கிறார். அதை மறந்துவிட கூடாது. அதுதான் அவரை ஃபேமிலி ஆடியன்ஸிடம் கொண்டு சேர்த்தது.
அதே போல விக்ரமுக்கு சேதுதான் கேரியர் அமைத்துக்கொடுத்த படம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது மிகவும் தவறு. நான் இயக்கிய அவர் நடித்த விண்ணுக்கும் மண்ணுக்கும் தான் அவரை ஃபேமிலி ஆடியன்ஸிடம் கொண்டு போய் சேர்த்தது. சேது படத்தை எந்த ஃபேமிலியும் நிச்சயமாக பார்க்கபோறது கிடையாது.
அன்னைக்கு வேண்ணா அது சரியா போகமா இருந்திருக்கலாம். ஆனா இன்னைக்கு சூரிய வம்சம் படத்திற்கு பிறகு, அதிகப்படியாக கே.டிவில் திரையிடும் படம் விண்ணுக்கும் மண்ணுக்கும்தான்.
இது நடிப்பு கிடையாது
கை, கால்களை இழுத்து கொண்டு மொட்டை அடித்துக் கொண்டு, கண்ணை ஒரு பக்கம் தூக்கிக்கொண்டு நடிப்பதால் மட்டுமே அவர் சிறந்த நடிகர் கிடையாது. டயலாக் இல்லாத காட்சிகளில்கூட டைரக்டர் கட் சொல்லும் வரை நடித்துக்கொண்டே இருக்க வேண்டும். அதுதான் நடிப்பு. அப்படி விக்ரமால் நடிக்க முடியாது. விக்ரம் ஒரு சிறந்த நடிகர் என்பதையெல்லாம் நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன். ஒன்று கமல்ஹாசன் போல நடிப்பார். இல்லை என்றால் ரஜினி போல் நடிப்பார். இது இரண்டையும் தவிர்த்து அவருக்கு வேறு ஒன்றும் தெரியாது.” என்று பேசினார்.
தகவல் உதவி:-
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்