கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாகவே காட்சியளிக்கும். இந்த நிலையில் கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு சுங்கச்சாவடிகள் உள்ளன. பெரும்பாலான இரவுநேர வாகனங்கள் குறிப்பிட்ட அதிகாலை நேரங்களில் வாகனங்களை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு லாரியின் ஓட்டுநர்கள் சிறிது ஓய்வுக்குப் பின்னரே தங்களது வாகனத்தை ஓட்டி வருவது பல ஓட்டுநர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.



இப்படிப்பட்ட சூழ்நிலையில் கரூரிலிருந்து எம்.சாண்ட் ஏற்றி வந்த டிப்பர் லாரியின் டிரைவர் மாயனூரை சேர்ந்த கார்த்திக் தூக்கக்கலக்கத்தில் சாலையை விட்டு எதிரே தஞ்சாவூரிலிருந்து தவிடு ஏற்றி வந்த லாரியின் மீது மோதியதில் வாழைத்தோப்புக்குள் லாரி கவிந்தது விபத்துக்குள்ளான நிலையில் தஞ்சாவூரில் இருந்து வந்த லாரி டிரைவர் ஐயப்பன் (30) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.




எம்.சாண்ட் ஏற்றி வந்த லாரி டிரைவர் கார்த்திக் கரூர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று  நடந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு தலைமையிலான காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்தனர். லாலாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




 


கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X


லாரி ஓட்டுநர் தூக்கக்கலக்கத்தில் மறு சாலையில் சென்ற லாரி மீது மோதி ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் தற்போது கரூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.