பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவர் டாப்ஸி பன்னு. இவர் தமிழ், ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகளுக்காக கோலிவுட், மாலிவுட்,பாலிவுட் போன்றவற்றில் தனி ரசிகர் பட்டாளமே இவருக்கு உண்டு. அவர் நடிப்பில் புதிதாக ராஷ்மி ராக்கெட் என்ற படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த திரைப்படம் டாப்ஸிக்கு மேலும் ஒரு வெற்றிப்படமாக அமைந்துள்ளது. விளையாட்டுத்துறையில் நடக்கும் அரசியல், பாலின பாகுபாடு தொடர்பாக பேசிய இந்த திரைப்படம். இந்நிலையில் இப்படம் குறித்து டாப்ஸி சில தகவல்களை மலையாளத்தின் மனோரமா இணையப்பக்கத்துக்கு பகிர்ந்துகொண்டுள்ளார்.
இந்தபடத்துக்கு உங்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளனர். அதேவேளையில் உங்கள் லுக் மாறிவிட்டதாக பலர் விமர்சனம் செய்தனரே?
ராஷ்மி ராக்கெட் படமே விளையாட்டு வீரரின் கதைதான். அதுவும் ஒரு வீராங்கனை, ஆண்களுக்கான ஹார்மோன் அதிகரித்து காணப்படுவதால் ஏற்படும் சிக்கலை பேசுவது. அதற்காக நான் உண்மையாகவே என் உருவத்தை மாற்றினேன். ஆண் சாயலிலான உருவத்தை கொண்டு வர மெனக்கெட்டேன். அதனால் கிண்டல்கள் எனக்கு வருத்தமாகவே இல்லை. அது எனக்கு பாராட்டு மாதிரியே.
பல வகையான, கலவையான படங்களை தேர்வு செய்கிறீர்களே?
என்னுடைய கதாபாத்திரங்களை ஒரு ரசிகரைப்போலவே நான் அணுகிறேன். நடிகையாக அதனை பார்ப்பதில்லை. அந்த கதாபாத்திரம் என்னை கவர்ந்திருத்தால் மட்டுமே நான் படத்துக்கு ஒகே சொல்வேன். கதையைக் கேட்டதுமே, இந்தப்படத்துக்கு நான் பணம் கொடுத்து படம் பார்க்க செல்வேனே என யோசிப்பேன்.
பெண்களை பிரதானப்படுத்தும் படத்தில் மட்டுமே தான் நடிப்பீர்களா இனி?
அப்படி எதுவுமே இல்லை. ஆனால் வரும் படங்கள் எல்லாம் அப்படியே வருகின்றன. அதனால் நான் அதனை தேர்வு செய்கிறேன். என்னை பொருத்தவரை முட்டாள்தனமான மசாலா படங்களுக்கு நான் சரியாக இருக்க மாட்டேன். அதே நேரம் மூளையை கசக்கும் நுட்பமான சினிமாவும் ஆகாது. நான் இரண்டுக்கும் இடையே நிற்கிறேன். பொதுவாக மக்கள் விரும்பும், ரசிக்கும் படங்களையே நான் தேர்வு செய்கிறேன்.
‛மொத்த வரியும் செலுத்தியாச்சு... சொன்னதை எப்போ திரும்பப் பெறுவீங்க?: பிடிவாதம் காட்டும் விஜய்!
இந்திய நடிகைகளுக்கு ஏதேனும் தடை உள்ளதா?
இங்கு நிறைய தடைகள் உள்ளன. இன்னும் சில பாகுபாடுகள் உள்ளன. பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பல படங்கள் முன்னணி ஹீரோவின் சம்பளத்தை விட குறைவாகவும் உள்ளது. நடிகர்களை ஒப்பிட்டால் நடிகைகளுக்கு என்றுமே சம்பளம் குறைவு தான்.
அடுத்த மலையாளப்படத்தில் எப்போது நடிப்பீர்கள்?
எனக்கு மலையாளம் மிகவும் பிடிக்கும். நான் மலையாளப்படங்களை விரும்பி பார்ப்பேன். மொழியே எனக்கு சிக்கல். நான் தமிழ், தெலுங்கில் தொடங்கி இப்போது ஹிந்தி பக்கம் சென்றுவிட்டேன். மொழியில் சிறப்பாக இருந்தாலே படம் சிறப்பாக வருமென நினைக்கிறேன். அதனால்தான் நான் தாய்மொழியான இந்தியில் கவனம் செலுத்துகிறேன். சரளமாக தெரியாத மொழிப்படத்தில் நடிப்பதை சற்று தள்ளிவைத்துள்ளேன். மொழி தெரியாமல் படத்தை கெடுத்துவிட எனக்கு விருப்பமில்லை என்றார்
Rajinikanth Speech: ‛என்னை வாழ வைத்த தமிழ்நாடு மக்களுக்கு நன்றி’ -விருதுக்கு பின் ரஜினி நெகிழ்ச்சி!