'பேங் பேங்' (2014) மற்றும் 'வார்' (2019) ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு, நடிகர் ஹிருத்திக் ரோஷன் - இயக்குநர் சித்தார்த் ஆனந்த் ஆகியோர் மூன்றாவது முறையாக இணையும் திரைப்படம் தான் ஃபைட்டர்.  இந்த படத்தில், ஷம்ஷேர் பதானியா என்ற போர் விமான பைலட் ஆக நடித்துள்ளார் ஹிருத்திக் ரோஷன்.


எதிர்பார்ப்பை கிளப்பிய ஃபைட்டர் திரைப்படம்:


இந்த படத்தில் தீபிகா படுகோன் மற்றும் அனில் கபூர் உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். ஃபைட்டர் படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 


இந்த நிலையில், ஃபைட்டர் படத்தின் புரமோ பாடலான 'இஷ்க் ஜெய்சா குச்' (Ishq Jaisa Kuch) வெளியாகியுள்ளது. இதில், ஹிருத்திக் ரோஷனின் அசாதரான நடன அசைவுகள், நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. கடந்த வாரம் வெளியான ஃபைட்டர் படத்தின் முதல் பாடலான 'ஷேர் குல் கயே' (Sher Khul Gaye) பாடலில் ஹிருத்திக் ரோஷன் தனது அசாத்திய நடன அசைவுகளால் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களை கவர்ந்தார்.  


ஃபைட்டரின் சமீபத்திய புரமோசனல் பாடலான 'இஷ்க் ஜெய்சா குச்' (Ishq Jaisa Kuch) மூலம் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தனது அசாத்திய நடன திறமையை மீண்டும் வெளிப்படுத்தி உள்ளர்.  ஹிருத்திக் ரோஷனின் மறக்கமுடியாத ஹூக் ஸ்டெப் நடன அசைவுகள், ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.


ஹிருத்திக் ரோஷனின் மிரட்டலான நடன அசைவுகள்:


ஹிருத்திக் ரோஷனின் நடன அசைவுகள் மட்டுமின்றி, பாடலின் ஹைலைட் அவரின் கவர்ச்சிகரமான உடல் அசைவுகள் ஆகும். இதன் மூலம் இந்தியாவின் ஃபிட்னஸ் பிரிக்காக இருப்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். மேலும் இந்தியாவின் கிரேக்க கடவுள் பட்டத்திற்கு ஏற்றவாறு உள்ளார்.


ஏக் பால் கா ஜீனா, மெயின் ஐசா கியூன் ஹூன், தூம் அகெய்ன், பேங் பேங், குங்ரூ மற்றும் ஷேர் குல் கயே போன்ற புகழ்பெற்ற பாடல்களின் வரிசையில் 'இஷ்க் ஜெய்சா குச்' (Ishq Jaisa Kuch) பாடலும் இணைந்துள்ளது.   'இஷ்க் ஜெய்சா குச்' பாடலில் ஹிருத்திக் ரோஷன் தீபிகா படுகோனேவுடன் நடனமாடி உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது. 


இந்தியாவின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 25, 2024 அன்று திரையரங்குகளில் 'ஃபைட்டர்' படம் வெளியாக உள்ளது.  இந்த படம் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.