நீண்ட இடைவெளிக்குப் பிறகு அல்லு அர்ஜுன் தனது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக தனது புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே அவரது ரசிகர்கள் அந்த புகைப்படத்தை இந்தியளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 




அல்லு அர்ஜுன், ஹரிஷ் ஷங்கர் இயக்கும் விளம்பர விளம்பரத்தின் படப்பிடிப்பு பாங்காக்கில் நடந்து வருகிறது. இந்தப் புகைப்படம் அதே படப்பிடிப்பில் எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.











இந்த கருப்பு வெள்ளை படத்தில் அல்லு அர்ஜுன் மிகவும் அழகாக இருக்கிறார் என்று அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் ஒரு மணி நேரத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. புஷ்பா 2 விரைவில் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் படத்தின் அடுத்த என்ன என்பது குறித்தும் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். 


கடைசியாக இவரது நடிப்பில் வெளியான புஷ்பா: தி ரைஸ் மூலம் நாடு முழுவதும்  வெளியாகி இவருக்கு நல்ல புகழை பெற்று தந்தது. செப்டம்பரில் ‘புஷ்பா 2’ படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். இயக்குனர் சுகுமார் தற்போது படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். பெரும் வெற்றி பெற்ற ‘புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது என்றும், இதற்காக  பட்ஜெட் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண