விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களின் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு நடிகர் அஜித் தனது பேஷனான கார் ரேசிங்கில் கவனும் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் துபாயில் ரசிகருடன் ஒருவருடன் அவர்  பேசும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. 


நடிகர் அஜித்: 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான நடிகர் அஜித் தற்போது கார் ரேசிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் விடமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களின் படப்பிடிப்பு  முடிவடைந்துள்ள நிலையில் இந்த படங்கள் ரிலீஸ்சுக்கு தயாராகி வருகிறது. இதில் விடாமுயற்சி திரைப்படம் வருகிற பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இப்படத்தை இயக்கியுள்ளார். 


இதையும் படிங்க: விஜய் மேல சந்தேகமா இருக்கு... ஏன் அரசியலுக்கு வர வேண்டும்? பற்ற வைத்த பார்த்திபன்


இயக்குனர் ஆதிக் ரவிச்சந்தர் இயக்கத்தில் தயாராகியுள்ள குட் பேக் அக்லி திரைப்படம் வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


கார் ரேசில் களமிறங்கிய AK: 


தனது படப்பிடிப்பு கம்மிட்மெண்ட்டுகளை முடித்துக்கொண்ட அஜித் கார் ரேசிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். துபாயில் நடந்த 24h கார் ரேஸ் தொடரில் அஜித்தின் அணி மூன்றாம் இடம் பிடித்து அசத்தி இருந்தது. மேலும் கார் ரேஸ் சீசன் முடியும் வரை படங்களில் நடிக்க போவதில்லை என்றும் அதற்கு இடைப்பட்ட காலங்களில் தான் நடிப்பேன் என்று அஜித் தெரிவித்திருந்தார். 






வைரல் வீடியோ: 


இந்த நிலையில் துபாயில் ரசிகர் ஒருவர் நடிகர் அஜித்துக்காக பாடல் பாடும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. துபாயில் ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு நடிகர் அஜித் சென்றுள்ளார். அப்போது ஹோட்டல் ஊழியர் ஒருவர் நடிகர் அஜித்துக்காக கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் கண்டுக்கொண்டேன் பாடலை பாடி அசத்தினார். 1.10 நிமிடம் இருக்கும் இந்த வீடியோவில் ஹோட்டல் ஊழியர் பாடுவதை அஜித் மெய் மறந்து ரசித்துக்கொண்டிருந்தார். 


இதையும் படிங்க: தமிழன் மட்டும் இளிச்சவாயானா? இதான் மண்ணுக்குத் தர்ற மரியாதையா அல்லு அர்ஜுன்?






வீடியோவின் முடிவில் அஜித் அந்த ஹோட்டல் ஊழியரிடம் உங்கள் பெயர் என்னவென்று கேட்க அவர் அஜித் என்று சொல்ல நடிகர் அஜித் சிரித்தப்படி சென்றார்.