நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ்குமாரை வைத்து ‘இடிமுழக்கம்’ எனும் படத்தை இயக்கிவருகிறார் சீனுராமசாமி. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் ஆரம்பித்து இன்று நிறைவடைந்தது. முழுக்க சென்டிமெண்ட் கதைகளாகவே எடுத்து வந்த சீனுராமசாமி இந்த படத்தில் ஆக்ஷனை கையில் எடுத்துள்ளார். அவரது சினிமா வாழ்க்கையில் இப்படம் ஒரு புதிய பரிமாணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடிமுழக்கம் படத்தின் தலைப்பை அவரது முந்தைய படங்களின் ஹீரோக்களான உதயநிதி ஸ்டாலின் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் அறிவித்தனர். இடையில் ஒரு நாள் படப்பிடிப்பு தளத்திற்கு விஜய் சேதுபதி விசிட் செய்து படக்குழுவினரை ஆச்சர்ய படுத்தினார்.



இந்நிலையில் இடிமுழக்கம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.  இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை எடிட் செய்து பார்த்தபின் ஜிவி பிரகாஷுக்கு இந்த படத்தில் கண்டிப்பாக விருதுகளும் பாராட்டுகளும் கிடைக்கும் என்று இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.  இதற்கு ஜி பிரகாஷ் நன்றி தெரிவித்துள்ளார்.  ஜிவி பிரகாஷை பற்றி சீனுராமசாமி கூறியதற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 


நடிப்பு, இசை என இரண்டிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார் ஜிவி பிரகாஷ். அவர் நடிப்பில் தற்போது Bachelor என்ற திரைப்படம் ரிலீஸுக்கு ரெடியாக உள்ளது. 2019ம் ஆண்டு வெளிவர வேண்டிய ஐயங்கரன் திரைப்படமும் இந்த மாதம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதேபோல் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும், அடங்காதே திரைப்படமும் இந்த வருடத்திற்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்திருக்கும் ‘ஜெயில்’ படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.



இந்நிலையில், சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘நீர்ப்பறவை’ படத்தின் ‘பற.. பற.. பற.. பறவை ஒன்று..’ எனும் பாடலால் தமிழ் ரசிகர்களின் மனதை இசையில் மூழ்கடித்த இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தன், சீனு ராமசாமி, ஜி.வி. பிரகாஷ் கூட்டணியில் உருவாகிவரும் ‘இடிமுழக்கம்’ படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தை ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.


’இடிமுழக்கம்’ திரைப்படத்தில் என்.ஆர். ரகுநந்தன் இசையில் கவிஞர் வைரமுத்து எழுதிய ‘பூ மலரும் காலம் எது யார் அறிவார் அன்பூ மலரும் இதயம் எது யார் அறிவார்...’ என்ற பாடலை பிரபல மலையாள இயக்குநரும், எழுத்தாளருமான வினித் ஸ்ரீனிவாசன் பாடியுள்ளார். 


இயக்குநர் பா.ரஞ்சித் - சந்தோஷ் நாராயணன் கூட்டணி முடிவுக்கு வருகிறதா?