கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மற்ற மாவட்டங்களை காட்டிலும் கூடுதலாக தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. கோவையில் கடந்த இரண்டு வாரங்களாக தினசரி கொரோனா பாதிப்புகள் ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. கோவையில் கடந்த மூன்று நாட்களாக தினசரி பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோவையில் நேற்றைய தினத்தை விட இன்று ஒருவருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது.


கோவையில் இன்று 230 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 35 ஆயிரத்து 504 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 2091 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 247 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால்  குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 31 ஆயிரத்து 156 பேராக உயர்ந்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2257 ஆக உள்ளது.


ஈரோடுதிருப்பூர், நீலகிரி நிலவரம்


ஈரோட்டில் இன்று 115 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 7 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 153  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்னர். மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 1474 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று 3 பேர் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 98024 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 95899 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 651 ஆக அதிகரித்துள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் இன்று 61 பேருக்கு இன்று கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 3 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 79 பேர் குணமடைந்துள்ள நிலையில், 814 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 90085ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 88344 ஆகவும் அதிகரித்துள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 927 ஆக உள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் இன்று 26 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 5 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 36 பேர் குணமடைந்துள்ள நிலையில், 356 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 31676 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 31126 ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 194 ஆக உள்ளது.