ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இந்திய ரசிகர்களிடையே இருக்கும் வரவேற்பு ஒவ்வொரு காலத்துக்கும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. பிரபல ஹாலிவுட் திரைப்படங்களான ஹாரி பாட்டர், பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன், காஞ்சூரிங், ஃபாஸ்ட் & ஃபியூரியஸ், மிஷன் இம்பாசிபள் போன்ற படங்களுக்கு இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது.


இந்தப் படங்களைத் தவிர்த்து தற்போது ஹாலிவுட் இயக்குநர்களான கிறிஸ்டோஃபர் நோலன் , டாராண்டினோ, மார்ட்டின் ஸ்கார்சீஸ் முதலிய இயக்குநர்களின் படங்களுக்கும் பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தப் படங்கள் இந்தியத் திரைப்படங்களுக்கு நிகரான வசூலை ஈட்டி வருகின்றன. அண்மையில் வெளியான இந்த இரண்டு ஹாலிவுட் திரைப்படங்கள் வெளியான சில தினங்களில் 100 கோடி வசூலை நெருங்கி வருகின்றன. அந்த இரண்டு படங்கள் இதோ!


மிஷன் இம்பாசிபள்


கடந்த ஜூலை 12ஆம் ஆண்டு வெளியான் டாம் க்ரூஸ் நடித்த ‘மிஷன் இம்பாசிபள்’ திரைப்படம் இந்தியாவில் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. வெளிநாடுகளில் படத்தின் வசூல் குறைந்தபோதிலும் இந்தியாவில் நிதானமாக களமாடுகிறது இந்தப் படம்.


மிஷன் இம்பாசிபள் பட ரசிகர்களாலும், டாம் க்ரூஸிற்கு இந்தியாவில் இருக்கும் அதிகப்படியான ரசிகர்களாலும் மட்டுமே இது சாத்தியமாகி இருக்கிறது.  திரையரங்குகளில் வெளியாகி இதுவரை 12 நாள்களைக் கடந்திருக்கும் மிஷன் இம்பாசிபள் திரைப்படம் இதுவரை மொத்தம் 92 கோடிகளை வசூல் செய்திருக்கிறது. இந்திய பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளை வெளியிடும் sacnilk தளத்தின்படி, மிஷன் இம்பாசிபள் படத்தின் முதல் நாள் முதல் 12ஆம் நாள் வரையிலான வசூல் நிலவரம் இதோ!


முதல் நாள் - ரூ. 12.25 கோடி


2ஆம் நாள் - ரூ 8.75 கோடி


3ஆம் நாள் - ரூ 9.25 கோடி


4ஆம் நாள் - ரூ 16.25 கோடி


5ஆம் நாள் - ரூ 17.50 கோடி


6ஆம் நாள் - ரூ 4.75 கோடி


7ஆம் நாள் - ரூ 4.25 கோடி


8ஆம் நாள் - ரூ 3.90 கோடி


9ஆம் நாள்  - ரூ 3.50 கோடி


10ஆம் நாள் - ரூ 2.50 கோடி


11ஆம் நாள்  - ரூ 4.65 கோடி


12ஆம் நாள் – ரூ 5 கோடி


மொத்தம் 92.7 கோடிகள்


ஓப்பன்ஹெய்மர்


 கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கி கடந்த ஜூலை 21ஆம் தேதி வெளியான ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படம் வெளியாகி மூன்று நாட்களில் இதுவரைக் குவித்துள்ள வசூல் நிலவராம்


முதல் நாள் – 14.5 ரூ கோடி


இரண்டாவது நாள் – 17 ரூ கோடி


மூன்றாவது நாள் – ரூ 17.25 கோடி


மொத்தம் – ரூ 48.75 கோடிகளை வசூல் செய்துள்ளது. மிஷன் இம்பாசிபிளைப் போல் இரட்டிப்பு மடங்கு வசூலை இப்படம் முதல் மூன்று நாள்களில் குவித்துள்ளது. அடுத்த வாரத்திற்குள்ளாக இந்தியாவில் 100 கோடி வசூலை ஓப்பன்ஹெய்மர் மற்றும் மிஷன் இம்பாசிபள்  திரைப்படங்கள் நெருங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.