பிரபல் ஹாலிவுட் நடிகர் ட்ரீட் வில்லியம்ஸ் கடந்த திங்களன்று மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தார்.


ஹாலிவுட்டில் ஒரு காலத்தில் புகழ்பெற்ற நடிகராக இருந்தவர் ட்ரீட் வில்லியம்ஸ். தி ஃபாண்டம் திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானவர் ட்ரீட் வில்லியம்ஸ். தொடர்ச்சியாக  நிறைய படங்களில்  நடித்து புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக மாறினார். கடந்த திங்கள் கிழமையன்று தனது மோட்டார் பைக்கில் ஒரு பயணம் சென்றுள்ளார் அந்த 71 வயது நடிகர். அப்போது எதிரில் வந்த கார் ஒன்றுடன் மோதி விபத்து ஏற்பட்டு படுகாயம அடைந்தார் ட்ரீட் வில்லியம்ஸ். அங்கிருந்து விமானம் வழியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.


எதிரில் வந்த கார் ஒரு வளைவில் திரும்புகையில் வில்லியம்ஸின் மோட்டர் பைக் கட்டுபாட்டை இழந்த நிலையில் காருடன் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள் சம்பவத்தை விசாரணை செய்த காவல் அதிகாரிகள்.


The phantom என்கிற திரைப்படத்தில் ஸாண்டர் ட்ராக்ஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார் வில்லியம்ஸ். இதனைத் தொடர்ந்து the eagle has landed once upon  a time in America , smooth talk, dead heat, the deep end of the ocean, deep rising, things to do when you are in Denver when you’re dead ஆகிய திரைப்படங்களில் நடித்தார் வில்லியம்ஸ். The late shift  என்கிற படத்தில் மைக்கெல் ஓவிட்ஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்த வில்லியம்ஸ் 1996 ஆம் ஆண்டு எம்மி விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டார். 2002 முதல் 2006 வரை ஒளிபரப்பான எவர்வுட் என்கிற தொலைக்காட்சித் தொடரில் மொத்தம் 89 எபிசோட்களில் ஆண்டி பிரவுன் என்கிற கதாபாத்திரத்தின்  நடித்து வந்தார் வில்லியம்ஸ்.


1951 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி கனெடிகட் இல் ஸ்டான்ஃபோர்டில் பிறந்தார் ட்ரீட் வில்லியம்ஸ். தனது 14 வயதில் தனது வீட்டைவிட்டு வெளியேறி கனெடிகட் பள்ளி படிப்பைத் தொடர்ந்தார். பாஸ்கட் பாலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த வில்லியம்ஸ் நாடகக் குழுவில்  சேருவதற்காக தனது பாஸ்கெட் பால் அணியில் இருந்து விலகினார். 1975 ஆம் ஆண்டு வெளியான the deadly hero என்கிறத் திரைப்படத்தில்  நடிகராக அறிமுகமானார். ஹாலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குநரான மிலோஸ் ஃபார்மன் இயக்கத்தில் உருவான hair திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டுக்களைப் பெற்றது. மேலும் ஸ்டிஃபன் ஸ்பீல்பெர்க் இயக்கிய 1941 என்கிற திரைப்படம் இவருக்கு நடிகராக பரவலான கவனத்தைப் பெற்றுத் தந்தது.