Actor Michael Douglas: பிரபல ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ் தஞ்சை பெரியகோவிலை பார்வையிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. 

 

ஆஸ்கர் விருது வென்ற நடிகர்:


பிரபல ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ் ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருதுளை பெற்று பிரபலமானவர். இவர் கோவாவில் நடைபெற்ற 54வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்றிருந்தார். இவருக்கு சத்யஜித்ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. 

 

இந்த விருதை பெறுவதற்காக மைக்கேல் டக்ளஸ் தனது மனைவி கேத்ரின் மற்றும் மகன் டைலனுடன் இந்தியா வந்தார். சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்ற மைக்கேல் டக்ளஸ், இந்தியாவின் சுற்றுலா தளங்களை பார்வையிட்டார். அதன் ஒருபகுதியாக தமிழகத்திற்கு வருகை தந்த அவர் தஞ்சை பிரதீஸ்வரர் கோயிலை பார்வையிட்டார். தஞ்சை பெரியகோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற மைக்கேல் டக்ளஸ் தமிழர்களின் பாரம்பரிய கட்டிடக்கலையை பார்த்து ரசித்தார். கோவிலில் அவருக்கு பூஜை செய்த மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தஞ்சை கோவிலில் கழுத்தில் மாலையணிந்தபடி மைக்கேல் டக்ளஸ் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

சர்வதேச திரைப்பட விழா:



54வது சர்வதேச திரைப்பட விழா (IFFI) கோவாவில் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. இதன் தொடக்க விழா டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் திரைப்பட விழாவை தொடங்கி வைத்தார். சர்வதேச திரைப்பட விழாவில் மாதுரி தீக்சித், ஷாகித் கபூர், ஸ்ரேயா சரண், நுஷ்ரத் பரூச்சா, பங்கஜ் திரிபாதி, சாந்தனு மொய்த்ரா, ஸ்ரேயா கோஷல் மற்றும் சுக்விந்தர் சிங் ஆகியோர் கலந்துகொண்டு நடனமாடினர். 


மேலும் இந்நிகழ்வில் சல்மான் கான், வித்யா பாலன், ஆயுஷ்மான் குரானா, அனுபம் கெர், விக்கி கவுஷல், சித்தார்த் மல்ஹோத்ரா, அதிதி ராவ் ஹைதாரி, ஏ.ஆர்.ரஹ்மான், அமித் திரிவேதி உள்ளிட்ட திரை பிரபலங்களும் கலந்துகொண்டனர். மொத்தம் 9 நாட்கள் நடைபெற்ற விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டன.


மேலும் படிக்க: