பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஹோலிப் பண்டிகை கொண்டாட்டத்திற்காக, இத்தாலியின் ரோம் நகருக்கு சென்ற பயணத்திற்குப் பிறகு லாஸ் ஏஞ்சல்ஸ் திரும்பினார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், பிரியங்கா தனது மகளுடன் முதல் ஹோலியைக் கொண்டாட வீட்டுக்கு திரும்பிய தருணங்களை குறிபிட்டு பல படங்களைப் பகிர்ந்துள்ளார்.
பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் பாடகர் நிக் ஜோனாஸ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாடகைத் தாய் மூலம் தங்கள் முதல் குழந்தையை தங்கள் வாழ்வில் வரவேற்றனர்.
இன்ஸ்டாம்கிராம் ஸ்டோரியில், பிரியங்கா சோப்ரா தனது காரில் அமர்ந்துபடி, சூரியனை ரசிக்கும் செல்ஃபியை பகிர்ந்துள்ளார். புகைப்படத்துடன் "ஹாய் ஹோம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்னொரு போட்டோவில் பல்கேரி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜீன்-கிறிஸ்டோஃப் பாபினுடன் போஸ் கொடுத்தபடி ஒரு செல்ஃபியையும் பகிர்ந்துள்ளார்.
ரோம் நகருக்கு ட்ரிப் குறித்து தனது வணிக சந்திப்பின் போது குழு உறுப்பினர்களுடன் இரவு உணவு விருந்து உண்ணும் போட்டோவையும் பகிர்ந்துள்ளார். பிரியங்கா தனக்கு முன்னால் இருந்த சாப்பாட்டுத் தட்டைக் காட்டி, "எனக்கு பிடித்த சில நபர்களுடன் ரோமில் ஒரு பயணம்" என்று எழுதியுள்ளார்.
முன்னதாக, தொழிலதிபர் ஜேம்ஸ் ஜி போல்டர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், இதே படத்தைப் பகிர்ந்துகொண்டு, "எனக்கு பிடித்த சிலருடன் ரோமில் சிறப்புப் பணியில் ஈடுபட்டுள்ளேன்" என்று குறிபிட்டுள்ளார்.
பிரியங்காவின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது. பிரியங்கா நடிக்கும் த்ரில்லர் படமான சிட்டாடல் (Citadel) மற்றும் ரொமாண்டிக் காமெடி படம் டெக்ஸ்ட் ஃபார் யூ ( Text For You) என்ற படத்திற்கான படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது.பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் தனது மகளுடன் கொண்டாடும் முதல் ஹோலி. வசந்தத்தை வரவேற்ற பிரியங்கா சோப்ராவும் மகிழ்ச்சியுடன் லாஸ் ஏஞ்சலுக்குத் திரும்பியுள்ளார்.
”சூர்யாவுக்காகத்தான் காலேஜ் போனேன்... அவ்வளவு இஷ்டம்“ - நடிகை சமந்தா கல்லூரி சுவாரஸ்யம்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்