மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் படம் தளபதி 65. இயக்குநர் நெல்சன் திலீப்குமார், இந்த படத்தை இயக்குகிறார். சில தினங்களுக்கு முன்புதான் படப்பூஜை நடைபெற்றது. சன் பிக்சர்ஸ் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. படத்தின் முதல் கட்ட ஷூட்டிங்குக்காக அனைவரும் ஜார்ஜியா சென்றிருந்தனர் என்பதுதான் லேட்டஸ்ட் அப்டேட்டாக இருந்தது.
தற்பொழுது ஜார்ஜியாவில் குளிர் மழை பொழிந்துவருவதால் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறாமல் தாமதமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு காட்சிகள் மட்டுமே படமாக்கப்படுகிற நிலை ஏற்பட்டுள்ளதால், படக்குழுவினர் வருத்தத்தில் இருப்பதாகவும் தெரிகிறது. இருப்பினும் ஜார்ஜியாவில் எடுக்கவேண்டிய காட்சிகளை முடித்த பின்னர்தான் படக்குழுவினர் சென்னை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது .