பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் கிட்டதட்ட  அதன் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டிருக்கிறது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வசூல் சாதனையை இரண்டாம் பாகம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்படி நடக்காதது ஆச்சரியம் தான். தமிழகத்தில் மட்டும் மொத்தம் 140 கோடி வசூல் ஈட்டிய  பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் தமிழகத்தில் அதிக வசூல் ஈட்டிய படங்களின் வரிசையில்  ஏழாவது இடத்தில் உள்ளது.


இனி வரக்கூடிய நாட்களில் அதிகபட்சம் 2 கோடிகள் அதிகம் வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் ஏழாவது இடத்தில் இருந்து 5 ஆவது இடத்திற்கு செல்லும். பொன்னியின் செல்வன் முதல் பாகம் தமிழகத்தில் மட்டும் 222 கோடி வசூல் செய்திருந்த நிலையில் அதைவிட 40 கோடி குறைவாக இருந்த கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் வசூல் செய்து 2ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த  இடத்தை பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விக்ரம் படத்தை விட 40 கோடி ரூபாய் குறைவாகவே பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வசூல் செய்துள்ளது. 


தற்போது பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்கள் உட்பட  தமிழ்நாட்டில் அதிக வசூல் ஈட்டிய மற்ற படங்களின் வரிசையை பார்க்கலாம்.


தமிழகத்தில் அதிக வசூல் ஈட்டிய படங்கள்



  1. பொன்னியின் செல்வன் (முதல் பாகம்) – 222 கோடி

  2. விக்ரம் – 181 கோடி

  3. பாகுபலி (இரண்டாம் பாகம்) – 146 கோடி

  4. வாரிசு – 144 கோடி

  5. மாஸ்டர் – 142 கோடி

  6. பிகில் – 141 கோடி

  7. பொன்னியின் செல்வன் (இரண்டாம் பாகம்) – 140 கோடி ( 32 நாட்கள்)

  8. சர்கார் – 131 கோடி

  9. விஸ்வாசம் – 128 கோடி

  10. மெர்சல் – 127 கோடி

  11. பீஸ்ட் – 119 கோடி

  12. துணிவு – 118 கோடி

  13. 2.0 – 113 கோடி

  14. கே.ஜி.எஃப் – 109 கோடி

  15. பேட்ட – 105 கோடி.


இந்த பட்டியல் தமிழகத்தில் அதிக வசூல் ஈட்டிய படங்களை மட்டுமே குறிக்கிறது. பிற மாநிலங்களில் வசூல் இதில் சேர்க்கப்படவில்லை.


இந்த மொத்த பதினைந்து படங்களில்  மொத்தம்  நடிகர் விஜயின் ஆறு படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. நடிகர் அஜித் படங்கள் இரண்டு. மேலும் சூப்பர்ஸ்டார்  ரஜினிகாந்தின் இரண்டு படங்களும் இடம் பெற்றுள்ளது.