வாலி பாடல்:
வார்த்தைகளில் வித்தை காட்டக் கூடியவர் வாலி. எம்ஜிஆருக்கு எத்தனையோ ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார். இவ்வளவு ஏன், கண்ணதாசனுடன் ஏற்பட்ட மனக்கசப்புக்கு பின் வாலி தான் இனி என் படங்களுக்கு பாடல் எழுதுவார் என்று, எம்.ஜி.ஆர் அதிகார பூர்வமாக அறிவித்த நிலையில் இந்த செய்தி அந்தக்காலத்தில் தலைப்பு செய்தியாக நாளிதழ்களில் வந்தது.
படகோட்டி:
வாலி எம்ஜிஆர் மற்றும் சரோஜா தேவி நடிப்பில் வந்த படகோட்டி படத்திற்கு பாடல் எழுதினர். இந்த படத்தை, இயக்குநர் டி பிரகாஷ் ராவ் இயக்க, இந்தப்படத்திற்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் இணைந்து இசை அமைந்திருந்தனர். இந்தப் படத்தில் மொத்தமாக 8 பாடல்கள் இடம் பெற்றிருந்தது. இதில் 7 பாடல்களுக்கு கவிஞர் வாலி பாடல் ஏற்கனவே வரிகள் எழுதி கொடுத்துவிட்டார்.
கடைசியாக ஒரு பாடல் எழுத வேண்டி இருந்தது. அந்த பாடலையும் கவிஞர் வாலி தான் எழுத வேண்டும் என்று எம்.ஜி.ஆர் மிகவும் கறாராக இயக்குனரிடமும், இசையமைப்பாளர்களிடமும் கூறி விட்டார். எனவே வாலியை வைத்தே பாடல் எழுத வேண்டிய சூழல் இருந்தது.
நம்பியாருக்கு பாடல்:
அதுவும் இந்த பாடல் எம்.ஜி.ஆருக்கு அல்ல, வில்லன் நம்பியாருக்காக எழுத வேண்டிய பாடல். நம்பியாருக்கு ஒரு காதலி இருக்கிறாள். அவளை நினைத்து நம்பியார் பாடும் பாடலை தான் கவிஞர் வாலி எழுதி தர வேண்டும் என்று கேட்டு அவரை அணுகியிருக்கிறார்கள். ஆனால், அந்த சமயம் அவருக்கு கடுமையான காய்ச்சல். எழுந்து கூட உட்கார முடியாமல் இருந்ததால், இந்த சூழ்நிலையில் என்னால் பாடல் எழுதி தர முடியாது என்று சொல்லிவிட்டார்.
ஆனால், இயக்குனருக்கோ எம்.ஜி.ஆர் வார்த்தையை மீறும் அளவுக்கு தைரியம் இல்லை. எனவே வாலி தான் எழுதி தர வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கவே, அவரின் நிலையை புரிந்து கொண்டு வேறு வழியில்லாமல் வாலியோ அந்த பாடலுக்கான வரிகளை எழுதி கொடுத்திருக்கிறார். அதுவும் பாடலுக்கான சூழலை சொல்லவே, அதனை ரொமாண்டிக்காக எழுதியிருக்கிறார். அப்படி என்ன சூழல் என்று கேட்டால், தன்னுடைய ஆசை நாயகி இருக்கும் போது எம்ஜிஆரின் காதலியான சரோஜா தேவி மீது காதல் கொண்டு அவரை நினைத்து ஆசை நாயகியை பார்த்து நம்பியார் மது போதையில் பாடல் ஒரு பாடல் தான் இது.
கடுமையான காய்ச்சலில் வாலி எழுதிய பாடல்:
அதற்கேற்ப வாலியும், கடுமையான காய்ச்சலோடு "அழகு ஒரு ராகம், ஆசை ஒரு தாளம்" என்று பாடல் வரிகளை எழுதி கொடுத்திருக்கிறார். உடனே பாடலும் ரெக்கார்டு செய்யப்பட்டு அடுத்தடுத்து வேலைகள் தீவிரமாக நடந்து படப்பிடிப்பும் எடுக்கப்பட்டுள்ளது. படமும் வெற்றிகரமாக ரிலீசாகி ஹிட் கொடுத்துள்ளது. பாடல்களும் பட்டி தொட்டியெங்கும் ஹிட்டோ ஹிட்டு. இன்றும் இந்த படத்திற்கும், படத்தின் பாடல்களுக்கும் மயங்காத ரசிகர்களே இருக்க முடியாது.