தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து திரையுலகிலும் முக்கியமான நடன இயக்குநராக வலம் வருபவர் பிருந்தா. 'ஹே சினாமிகா' படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் இவரின் கதாநாயகன் மலையாள பிரபல நடிகர் துல்கர் சல்மான்.
கதாநாயகிகளாக, அதிதியும் காஜல் அகர்வாலும் நடிக்க, 96 படத்தில் இசையமைத்து கவனம் ஈர்த்த கோவிந்த் வசந்தா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். முன்னதாக இந்தப்படத்தின் போஸ்டர்கள், வீடியோ பாடல்கள் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், தற்போது படத்தில் இருந்து ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது.