சூர்யா மற்றும் பாலா கூட்டணியில் உருவான நந்தா, பிதாமகன் திரைப்படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக திரைப்படம் ஒன்று உருவாகவுள்ளது. பெயர் வைக்கப்படாத அந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் களம் காண்கிறார். சூர்யாவின் சினிமா கெரியரை நந்தா திரைப்படத்திற்கு முன், நந்தா திரைப்படத்திற்கு பின் என இரண்டாக பிரிக்கலாம் . அந்த அளவுக்கு பாலா , சூர்யாவின் சினிமா கெரியரையே தலைகீழாக மாற்றிவிட்டார். இந்தநிலையில் மூன்றாவதாக கூட்டணி அமைக்கும் புதிய படத்தின் அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தார் சூர்யா.அதில் “ “என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்…ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்.. 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்…அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்...அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்…” என தெரிவித்திருந்தார்.




18 ஆண்டுகளுக்கு பிரகு சூர்யா-பாலா கூட்டணி இணைய இருப்பதை ரசிகர்கள் கொண்டாடினர். தற்போது படத்தின் கதாபாத்திரங்கள் தேர்வு முனைப்புடன் நடைப்பெற்று வருகிறது.  சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்யலாம் என யோசித்து வருகின்றனராம் படக்குழு. இது ஒரு புறம் இருக்க  பாலிவுட்டின் பிரபல நடிகையும் , நாடாளுமன்ற உறுப்பினருமான ஹேமமாலினி, சூர்யா -பாலா கூட்டணியுடன் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகவுள்ளது. சூர்யா தரப்பு இது குறித்து ஹேம மாலினியுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். அதற்கு அவரும் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாகவும் படு பிஸியாக இருக்கும் ஹேமமாலினி பாலா படத்திற்கான கால்ஷீட்டை ஒதுக்கிய பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படது. இந்நிலையில் ஹேம மாலினி தரப்பு அதனை மறுத்துள்ளனர். மேலும் அவர் எந்தவொரு தென்னிந்திய சினிமாவிலும் நடிக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.







ஹேமமாலினி தமிழ்நாட்டை சேர்ந்தவர். அம்மன்குடி என்னும் ஊரில் 1948 ஆம் ஆண்டு பிறந்தார். நடிகை ,அரசியல்வாதி என்பதை தாண்டி தொகுப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர், நடன கலைஞர் என பன்முக திறமையை ஒருங்கே பெற்றவர். முதன் முதலாக 1963 ஆம் ஆண்டு வெளியான ‘இது சத்தியம்’ என்னும் தமிழ் திரைப்படம் மூலமாக சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தார். அதன் பிறகு பாலிவுட் திரையுலகம் இவரை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. அதன் பிறகு பாலிவுட் சினிமாவில் கோலோச்சிய ஹேம மாலினி , இந்தி மற்றும் தமிழ் மொழியில் உருவான ‘ஹே ராம்’ என்னும் பை லிங்குவல் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.