நடிகர் விஜய்தேவரகொண்டா மீண்டும் இயக்குநர் பூரி ஜெகன்நாத்துடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
லைகருக்குப்பிறகு, விஜய் தேவரகொண்டா ஜன கண மன மற்றும் குஷி என்ற ஆகிய இரண்டு படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதில் பூரி ஜெகநாத் இயக்கும் ஜன கண மன படத்தில் ராணுவ அதிகாரியாக அவர் நடிப்பதாக முன்னதாக அறிவிப்பு வெளியான நிலையில், லைகரின் தோல்வியால் அந்தப்படம் கைவிடப்படுவதாக தகவல் வெளியானது. ஆனால், அவை அனைத்தையும் பொய்யாக்கும் வகையில் விஜய் தேவரகொண்டா ஒரு படத்தை வெளியிட்டுள்ளார். அந்தப்புகைப்படம், ராணுவ ஆடையில் அவர் துப்பாக்கி சுடும் வீரராக மாறி, முகாம் தளத்தில் இந்திய ராணுவ அதிகாரிகளுடன் பயிற்சி பெறுவது போன்று அமைந்து இருந்தது. இதன் மூலம் அந்தப்படத்தின் படத்தின் வேலைகள் நடந்து வருவதாகவே தெரிகிறது.
இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் புகைப்படத்தைப் பகிர்ந்த விஜய் தேவரகொண்டா, " With the Baddest Men on the Indian front lines! #URI." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
முன்னதாக, படம் கிடப்பில் போடப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தயாரிப்பாளர் சார்மி கவுர் ட்விட்டரில், "வதந்திகள் வதந்திகள்! அனைத்து வதந்திகளும் போலியானவை! முன்னேற்றத்தில் கவனம் செலுத்துகிறோம். RIP வதந்திகள்." என்று குறிப்பிட்டு இருந்தார். அவர் தனது பதிவில் ஜன கண மன என்று குறிப்பிடவில்லை என்றாலும், அது நிச்சயமாக அதை குறிப்பிடும் விதமாகவே இருந்தது.
இந்த முயற்சி அறிவிக்கப்பட்டபோது, உற்சாகமான விஜய் தேவரகொண்டா, “ ஜனகணமன படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் உற்சாகம் அளிப்பதாக இருக்கிறது. இது சவாலான ஸ்கிரிப்ட்களில் ஒன்றாகும். இந்தக்கதை ஒவ்வொரு இந்தியனையும் தொடும். பூரியின் கனவுத் திட்டத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை அடைகிறேன். சார்ம் மற்றும் அவரது குழுவுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். ஜன கண மன எனது கதாபாத்திரம் இதுவரை நான் செய்யாத புத்துணர்ச்சியை தருகிறது, மேலும் இது பார்வையாளர்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.”
சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெகநாத் ஆகியோருடன் இணைந்து தயாரிக்கும் ஜன கண மன, விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். பான்-இந்தியா திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் 3, 2022 அன்று வெளியாகவுள்ளது.