90ஸ் கிட்ஸ்களால் கொண்டாடித் தீர்க்கப்பட்ட ஹாரி பாட்டர் படங்களில்,  ‘ஹாக்ரிட்’ எனும் கதாபாத்திரத்தில் நடித்து, உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தை ஈர்த்த ராபி கோல்ட்ரேன் நேற்று காலமானார்.


மாயாஜால உலகை மையப்படுத்தி வெளிவந்து உலகம் முழுவதும் வசூலில் சக்கை போடு போட்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள திரைப்பட சீரிஸ் ஹாரி பார்ட்டர்.


ஆங்கிலத்தில் ஜே.கே.ரவுலிங் எழுதிய ஹாரி பாட்டர் நாவலை மையப்படுத்தி வெளிவந்த இந்தத் திரைப்பட சீரிஸ் அளவுக்கு, உலகம் முழுவதுமுள்ள குழந்தைகளை ஒன்றாகக் கட்டிப்போட்ட திரைப்படங்கள் இன்று வரை இல்லை என்றே சொல்லலாம்!


 






 90ஸ் கிட்ஸ் எனப்படும் 90களில் பிறந்த நபர்கள்,ம் மொத்தம் 7 பாகங்களாகவும், 8 படங்களாகவும் வெளியான இந்த இந்தத் திரைப்பட சீரிஸ் உடன் சேர்ந்தே தான் வளர்ந்தனர். 


ஹாரி பாட்டர், ஹெர்மாயினி, ரான் வீஸ்லி, டம்பிள் டோர் என பல முக்கியக் கதாபாத்திரங்களும் கிளைக்கதைகளும் கதைக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த சீரிஸில் அமைந்திருக்கும்.


அந்த வகையில் இப்படங்களில் முதல் பாகத்தில் இருந்து பயணிக்கும் முக்கியப் பாத்திரங்களுள் ஒன்றான ஹாக்ரிட் கதாபாத்திரத்தில் நடித்து, கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தவர் நடிகர் ராபி கோல்ட்ரேன்.


ஹாரியை மாயஜால உலகுக்கு முதன்முதலில் அழைத்து வருவது தொடங்கி, தன் பிரத்யேக ஆளுமை, குறும்பான பேச்சு போன்றவற்றால் ஹாரி பாட்டர் உலகுக்கு உள்ளே உள்ள குழந்தைகள் படம் பார்க்கும் குழந்தைகள் என அனைவரையும் மகிழ்சித்திருப்பார். 


இந்நிலையில், முன்னதாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த ராபி கோல்ட்ரேன் நேற்று (அக்.14) மறைந்தார். அவரது இழப்பு உலகம் முழுவதும் ஹாரி பாட்டர் படங்கள் பார்த்து வளர்ந்த ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.


 






ஹாரி பாட்டர் பட ரசிகர்கள் தொடர்ந்து ட்விட்டரில் அஞ்சலி பதிவுகள் பகிர்ந்து வரும் நிலையில், ராபி நம்ப முடியாத திறமைசாலி என்றும் அவரது குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவித்தும் ஹாரி பாட்டர் நாவலை எழுதிய ஜே.கே.ரவுலிங் பதிவிட்டுள்ளார் 




 


 






அதே போல், ஹாரி பாட்டராக நடித்த டேனியல் ரேட்க்ளிஃப், ஹெர்மாயினியாக நடித்த எம்மா வாட்சன், ட்ரேகோவாக நடித்த டாம் ஃபெல்டன் உள்ளிட்ட நடிகர்களும் ராபி கோல்ட்ரேனுக்கு அஞ்சலி செலுத்தி பதிவிட்டுள்ளனர்.