உலகளாவிய பேரிடர் விழிப்புணர்வு மற்றும் பேரிடர் குறைப்பு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்காக, பேரிடர் அபாய குறைப்புக்கான சர்வதேச தினம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் 1989-ல் தொடங்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 13-ந் தேதி சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதும் வெள்ளம் , புயல் பூகம்பம் உள்ளிட்ட பல்வேறு பேரிடர் ஏற்படுவதால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும் இழந்து வருகின்றனர் பேரிடர் ஏற்படுவதை தடுக்க உலக நாடுகள் பெறும் முயற்சி செய்து வருகின்றனர் அந்த வகையில் புவி வெப்பமடைதல் அதிகரிப்பதை தடுக்க கடல் வளம் பேணி காக்க வலியுறுத்தி சுற்றுலா பயணிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் உள்ள கடற்கரை பகுதிகளை ஸ்டெல்லா மேரிஸ் பள்ளி மாணவ மாணவிகள் சுத்தம் செய்தனர். கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை கடலில் வீசுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவி கூறுகையில், “உலக அளவில் கடற்கரை ஓரம் மக்களால் வீசப்படும் குப்பைகள் கடலில் சேர்ந்து வருவதால் கடல் மாசுபடுகிறது. கடல் வளம் மாசுபடுகிறது. கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து போகும் நிலை ஏற்படுகிறது. இது மனித குலத்திற்கு பேராபத்தாக முடியும் குப்பைகள் கடலில் கலப்பதால் காலநிலை மாற்றம் ஏற்பட்டு புவி வெப்பமடைய நேரிடும். இதனால் பனிப்பாறைகள் உருகி கடல் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் யாரும் கடற்கரை ஓரம் குப்பைகளை தூக்கி வீச வேண்டாம். குப்பை தேங்குவது தவிர்த்து அதனை சுத்தம் செய்து சுகாதாரப்படுத்த வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.