ஆந்திரா மாநிலத்தில் அமைந்துள்ளது கிருஷ்ணா மாவட்டம். இந்த மாவட்டத்தில் சந்தர்லபடு மண்டல் பகுதியில்
எத்துரூ என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள  மக்ளூரி சன்னி ( வயது 12) கர்லாபாலா யேசு (வயது 12) ஜத்தி அஜய்( வயது 12) மயிலா ராகேஷ் ( வயது 11)  மற்றும் குராஜாலா சரண் ( வயது 14) ஆகிய 5 பேரும் கடந்த திங்கள்கிழமை மதியம் அவரவர் வீடுகளில் இருந்து 2 மணியளவில் வெளியில் சென்றுள்ளனர்.


மாலையை கடந்து இரவு நேரமாகியும் இவர்கள் 5 பேரும் அவரவர் வீடுகளுக்கு திரும்பவில்லை. இதனால், பதற்றமடைந்த அவர்களது பெற்றோர்கள் அந்த பகுதி முழுவதும் தேடியுள்ளனர். அப்போதுதான் 5 சிறுவர்களும் மாயமாகி இருப்பது ஒவ்வொரு பெற்றோருக்கும் தெரியவந்துள்ளது. உடனடியாக, அவர்கள் அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.




மேலும், அந்த கிராமத்தில் உள்ள முக்கிய நீர் ஆதாரமான கால்வாயில் அந்த 5 சிறுவர்களின் ஆடைகளையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். கால்வாயில் அதிகளவில் நீர் சென்றதால் மாணவர்கள் நீரில் மூழ்கி இருப்பார்களோ, அல்லது கால்வாயில் அடித்துச் சென்றிருப்பார்களோ என்ற அச்சத்தில் அப்பகுதியைச் சேர்ந்த நீச்சல் வீரர்கள் உள்பட பலரும் கால்வாய் நீரில் இறங்கி தீவிரமாக தேடினர்.  


இந்த நிலையில், நேற்று எத்துரூ கிராமத்தில் உள்ள முன்னெரு கால்வாயில் சடலங்கள் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. போலீசாரின் விசாரணையில் முன்னேரு கால்வாயில் மிதந்த சடலங்கள் காணாமல் போன 5 சிறுவர்களின் உடல் என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சடலங்களை மீட்ட போலீசார் 5 சிறுவர்களின் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  உயிரிழந்த மக்ளூரி சன்னி, யேசு மற்றும் அஜய் இருவரும் ஏழாம் வகுப்பு படிக்கின்றனர். ராகேஷ் ஆறாம் வகுப்பும், சரண் 9ம் வகுப்பும் படிக்கின்றனர்.




உயிரிழந்த 5 சிறுவர்களின் பெற்றோர்களும் அப்பகுதியில் விவசாய கூலிகளாக பணியாற்றி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த அந்த தொகுதி எம்.எல்.ஏ. மோண்டிதொகா ஜெகன் மோகன ராவ் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்த்து, இறந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர், அவரவர் குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 ஆயிரம் இழப்பீடு வழங்கினார். ஒரே கிராமத்தைச் சேர்ந்த 5 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண