” சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் “ என்னும் வைரமுத்தின் வரிகள் இக்காலத்திற்கு மட்டுமல்ல எக்காலத்திற்கும் பொருந்தும், அந்த வகையில் மூன்று தலைமுறைகள் கடந்து நான்காவது தலைமுறையும் ரஜினிகாந்தை கொண்டாடி வருகிறது. இன்று தனது 72 வது அகவையில் அடியெடுத்து வைக்கும்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு திரையுல நண்பர்கள் , ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களையும் அன்பையும் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் இந்திய கிரிக்கெட் வீரரும் , நடிகருமான ஹர்பஜன் சிங் தனது தனித்துவமான வாழ்த்தால் அதிக கவனம் பெற்றுள்ளார். ரஜினிகாந்திற்கு ஒவ்வொரு ஆண்டும் தனது ட்விட்டட் பக்கத்தில் தமிழில் எழுதி வாழ்த்து தெரிவிப்பார் ஹர்பஜன் சிங். ஹர்பஜனுக்கு தமிழ் மீதான ஆர்வம் நாம் அறிந்ததுதானே இதில் என்ன வித்தியாசம் என கேட்கிறீங்கதானே! 






 


 


 வழக்கம் போல தனக்கே உரித்தான ரைமிங் பாணியில் வாழ்த்து தெரிவித்த ஹர்பஜன், தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினியில் இளம் வயது முகத்தை டாட்டூவாக போட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் , “இவ்வளவு தீவிரமான ரஜினி ரசிகரா ஹர்பஜன் சிங் ?! “ என திகைத்துள்ளனர். ஆனால் இது நிரந்தர டாட்டூவா எனவும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த புகைப்படத்தை பகிர்ந்த ஹர்பஜன் “ என் மாருமேல சூப்பர் ஸ்டார்....."80's பில்லாவும் நீங்கள் தான்......90's பாட்ஷாவும் நீங்கள் தான் .....2k அண்ணாத்த நீங்கள் தான். சினிமா பேட்டையோட ஒரே சூப்பர் ஸ்டார் தலைவா ! ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார். (யாருப்பா! அந்த அட்மின் ) இந்த ட்வீர் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.






 


ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் ரஜினிக்கு வாழ்த்து சொல்லும் ஹர்பஜன் சிங்கை இனி , தீவிர ரஜினி ரசிகர் என்றே குறிப்பிடலாம். ஹர்பஜன் சிங்கிற்கு தமிழ் மீது எந்த அளவு ஆர்வம் இருக்கிறதோ அதே அளவு சினிமா மீதும் தீவிர காதல் . சிறந்த கிரிக்கெட் வீரராக அறியப்படும் ஹர்பஜன் சிங் நடிப்பில் சமீபத்தில் ஃபிரண்ட்ஷிப் என்னும் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.