உலகம் முழுவதும் புத்தாண்டு நாளை கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்திய தொலைக்காட்சிகளில் சிறப்பு பட்டிமன்றமும், சிறப்பு திரைப்படங்களும் ஒளிபரப்பப்படுவது ஆண்டுதோறும் வழக்கமாக உள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டமாக தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளில் நாளை என்னெனன்ன படங்கள் ஒளிபரப்பப்படுகிறது என்பதை கீழே காணலாம்.
விஜய் டிவி:
முன்னணி தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் நாளை காலை 11.30 மணிக்கு 2024ம் ஆண்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ப்ளாக்பஸ்டர் படமான லப்பர் பந்து ஒளிபரப்பாக உள்ளது. புத்தாண்டு சிறப்புத் திரைப்படமாக இந்த படம் நாளை ஒளிபரப்பாக உள்ளது. 2024ல் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் மகாராஜா. இந்த படம் நாளை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
கலைஞர் டிவி:
கலைஞர் தொலைக்காட்சியில் புத்தாண்டு கொண்டாட்டமாக பிடி சார் படமும், ஜெய்பீம் படமும் ஒளிபரப்பாக உள்ளது. ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியாக நல்ல வரேவற்பைப் பெற்ற படம் பிடி சார். இந்த படம் நாளை காலை 10 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
சூர்யா நடிப்பில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம் ஜெய்பீம். ஜெய்பீம் படம் நாளை மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
ஜீ தமிழ்:
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்த பிரதர் படம் ஒளிபரப்பாக உள்ளது. பிரபல நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாக இந்த படம் வர்த்தக ரீதியாக தோல்வி அடைந்தது.
இந்த நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புத்தாண்டு கொண்டாட்ட்டமாக இந்த படம் நாளை மதியம் 3 மணிக்கு பிரதர் படம் ஒளிபரப்பாகிறது. இந்த படத்தை எம்.ராஜேஷ் இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன், பூமிகா நடித்துள்ளனர்.
சன் டிவி:
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் கடந்தாண்டு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்த லால் சலாம் படம் ரிலீசானது. இந்த படத்தை ரஜினியின் மகள் இயக்கியுள்ளார். மேலும், மிகுந்த எதிர்பார்ப்புடன் ரிலீசான கவினின் ப்ளடி பெக்கர் படமும் புத்தாண்டு கொண்டாட்டமாக ஒளிபரப்ப்படுகிறது.
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த படங்களுடன் ஏராளமான சிறப்பு பேட்டிகளும், நிகழ்ச்சிகளும், பட்டிமன்றமும் ஒளிபரப்பாக உள்ளது.