உலகெங்கிலும் இன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தந்தையர் தினத்தை முன்னிட்டு ஏராளமான பிரபலங்கள் அவர்களின் தந்தைகளுக்கு சோசியல் மீடியா மூலம் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். 


நடிகை நயன்தாரா:


விக்னேஷ் சிவன் தன்னுடைய மகன்கள் உயிர் மற்றும் உலக் உடன் இருக்கும் அழகான தருணங்களின் வீடியோ ஒன்றை பகிர்ந்து "உலகில் உள்ள Besssssttttt அப்பாவுக்கு இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள்! எங்கள் உலகம் முழுவதும் உங்களைச் சுற்றியே சுழல்கிறது... நீங்கள் தான் எங்களுக்கு எல்லாமே... நாங்கள் உங்களுடையவர்களாக இருப்பதில் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்... நாங்கள் உன்னை மிகவும் நேசிக்கிறோம்
அப்பாஆஆஆஆ!" என போஸ்ட் செய்துள்ளார்.


 







இசையமைப்பாளர் இமான் :


இமான் அவரின் தந்தை இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் அதே வேளையில் பிறந்தநாள் வாழ்த்துடன் சேர்த்து தந்தையர் தின வாழ்த்தையும் தெரிவிக்கும் வகையில் அன்பான போஸ்ட் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 


"உலகின் மிகவும் அபிமான தந்தையான அப்பாவுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்! எனது வழிகாட்டி, அனைத்து பரோபகார நடவடிக்கைகளுக்கும் வழிகாட்டி! வரவிருக்கும் ஆண்டுகள் மகத்தான மகிழ்ச்சியையும் அமைதியையும் தரட்டும்!


இன்று தந்தையர் தினம் என்பது உங்களைப் போன்ற ஒரு அற்புதமான தந்தையின் இருப்பின் மூலம் அதன் அர்த்தத்தைப் பெறுகிறது! ஆசீர்வதிக்கப்பட்டிரு! " எனப் பகிர்ந்துள்ளார். 


 



ரேயான் மிதுன் :


ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் தன்னுடைய தந்தைக்கு தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வரும் ராதிகாவின் மூத்த மகள் ரேயான், இந்த ஆண்டும் தன்னுடைய அழகான வீடியோ போஸ்ட் மூலம் நடிகர் சரத்குமாருக்கு தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 


"ஒவ்வொரு நாளும் நான் எவ்வளவு நேசிக்கப்படுகிறேன் என்று எனக்குத் தெரியும் என்பதை உறுதிப்படுத்தும் மனிதனுக்கு. அப்பா, நீங்கள் செய்யும் அனைத்தையும் நான் பாராட்டுகிறேன், நீங்கள் இருக்கும் எல்லாவற்றிற்காகவும் உன்னை நேசிக்கிறேன் என்று நான் போதுமான அளவு சொல்வதில்லை. நான் விரும்பும் சிறந்த தந்தை நீங்கள். லவ் யூ அப்பா! இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள், அப்பா" என் பதிவிட்டுள்ளார். 


 







ஐஸ்வர்யா ரஜினிகாந்த் :


தன்னுடைய தந்தை நடிகர் ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து "என் இதயத்துடிப்பு, மை ஆல், லவ் யூ அப்பா" என பகிர்ந்துள்ளார். 


 



அல்லு அர்ஜூன் :


தெலுங்கு திரையுலகின் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன்னுடைய தந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து "உலகில் உள்ள ஒவ்வொரு தந்தைக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்" என பகிர்ந்துள்ளார். 


 



ஆலியா பட் : 


நடிகை ஆலியா பட் தன்னுடைய தாத்தாவுடன் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து "எனக்கு பிடித்த கதைசொல்லி, பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாத்தா, நீங்களும் உங்கள் கதைகளும் என்றென்றும் எங்கள் இதயங்களில் வாழ்கிறீர்கள்" எனப் பதிவிட்டுள்ளார். 


மேலும் ஸ்ருதிஹாசன், அனன்யா பாண்டே, கரண் ஜோகர், அர்ஜுன் கபூர் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் அவர்களின் தந்தையர்களுக்கு மனமார்ந்த தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.