தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ள 'ஹனுமான்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல  வரவேற்பை பெற்றுள்ளது. 


 



 


அசத்தலான விஷுவல் எஃபெக்ட்ஸ்:


பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் தெலுங்கு இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கியுள்ள முதல் பான் இந்தியா திரைப்படம் இதுவாகும். அவெ மற்றும் சாம்பி ரெட்டி போன்ற திரைப்படங்கள் மூலம் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் பிரசாந்த் வர்மா.  நடிகர் தேஜா சஜ்ஜா ஹானிமன் கதாபாத்திரத்திலும், நடிகை அம்ரிதா ஐயர் மீனாட்சி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டீசரில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் திருமண பெண் தோற்றத்தில் எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சிகளில் மிரட்டியுள்ளார். இப்படத்தில் மிகவும் பிரமாண்டமான விஷுவல் எஃபெக்ட்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. படத்தின் டீசர் காட்சிகளே மிகவும் பிரமாண்டமாக எதிர்பார்ப்பை விடவும் அதிகமாக இருப்பதாக திரை ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 






 


'ஆதிபுருஷ்' திரைப்படத்தை விடவும் அதிகமான எதிர்பார்ப்பு :


தெலுங்கில் உருவான இப்படம் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனொன் நடிப்பில் ராமாயண கதையை தழுவி வெளியான 'ஆதிபுருஷ்'  திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்ததோ அதை விடவும் பல மடங்கு அதிகமாக ஹனுமான் திரைப்படம் ரசிகர்களை ஈர்க்கும் என கூறப்படுகிறது. இப்படம் 12 கோடி ரூபாய் செலவில் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.