தமிழ் சினிமாவின் குட்டி குஷ்பூ ஹன்சிகா மோத்வானி தனது நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான சோஹைல் கதுரியாவுக்கும் சில தினங்களுக்கு முன்னர் மிகவும் பிரமாண்டமாக ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் உள்ள 450 வருட பழமையான முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் திருமணம் நடைபெற்றது. அவர்களின் திருமணம் சடங்குகள், சம்பிரதாயங்கள் என திருமண கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வந்தது.
அல்வா கொடுக்கும் ஹன்சிகா :
அந்த வகையில் இந்த கியூட்டான ஜோடிதான் சில தினங்களாக ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்கள். தனது காதல் கணவர் சோஹைல் கதூரியாவுக்கு அல்வா தயார் செய்துள்ளார் நம்ம ஹன்சிகா. இது அவர்களின் குடும்ப சம்பிரதாயங்களில் இருக்கும் ஒரு சடங்காகும். 'பெஹ்லி ரசோய்' குறித்த பதிவு ஒன்றை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ள ஹன்சிகா அதை கணவருக்கு பரிமாறுவது போன்ற ஒரு புகைப்படத்தை போஸ்ட் செய்துள்ளார். ஹன்சிகாவின் ரசிகர்கள் இந்த போஸ்ட்க்கு லைக்ஸ்களை குவித்து வருகிறார்கள்.
வெட்கத்தில் சிவந்த ஹன்சிகா :
இரண்டு தினங்களுக்கு முன்னர் விமான நிலையத்தில் காணப்பட்ட ஹன்சிகா, சோஹைல் கதுரியா ஜோடியின் புகைப்படங்களும் வீடியோவும் வைரலாகின. அந்த சமயத்தில் அவர்களின் ஹனிமூன் குறித்து கேட்டதற்கு முகம் சிவக்க வெட்கப்பட்டு சிரித்துள்ளார் ஹன்சிகா.
Newly Married #HansikaMotwani with husband at Airport arrival. #Viralvideo pic.twitter.com/bXA8PyuLHY
— Talora Maahi (@TaloraMaahi) December 7, 2022