தமிழகத்தில் மாண்டஸ் புயல் தாக்கம்- கரூரில் வைகை புயல் நாய் சேகர் ரிட்டர்ன்ஸின் தாக்கம்.




வைகைப்புயல் வடிவேலு என்ற பெயரை கேட்டால் தெரியாத நபர்களே இருந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் தேர்தல் நேரத்தில் அவர் பல்வேறு கருத்துக்களை முன் வைத்திருந்தார். இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் நடிகர் சங்கத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அவருக்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டிருந்தது. அதனை லைக்கா நிறுவனத்தின் முயற்சியால் நீக்கப்பட்டு தற்போது லைக்கா நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டுள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.தமிழகத்தில் இந்த திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.




இந்நிலையில் இன்று கரூரில் அஜந்தா திரையரங்கில் நான்கு காட்சிகளாக இந்தப்படம் வெளியாகியுள்ளாது. இந்நிலையில் முதல் காட்சியில் ஏராளமான வடிவேல் ரசிகர்கள் திரைப்படத்தைக் கண்டு ரசித்தனர். தற்போது தமிழகத்தில் மாண்டஸ் புயல் தாக்கத்தால் பல்வேறு இடங்களில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை உள்ளிட்ட சில இடங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. 




இருப்பினும் தமிழகத்தில் இந்த திரைப்படம் பல்வேறு தினங்களில் வெளியாகி நீண்ட நாட்களுக்குப் பின்  வைகைபுயல் வடிவேல் நடித்துள்ள திரைப்படம் வெளியானதால் ஏராளமான வடிவேல் ரசிகர்கள் இப்படத்தை ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். மொத்தத்தில் வைகைப்புயல் நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருப்பது அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.