இந்த பிக்பாஸ் சீசனில், டபுள் எவிக்ஷன் நடக்கவுள்ளதால் ஆயிஷாவின் ரசிகர்கள் பலர் அவருக்கு அதிக வாக்குகளை அளிக்குமாறு கேட்டு வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், ஜி.பி முத்து அவர் விருப்பப்பட்டு தானாகவே வெளியேறினார். அதே வாரத்தில் குறைந்த நாமினேட் செய்யப்பட்ட சாந்தி குறைந்த ஓட்டுகளை பெற்று வெளியேறினார். அதன் பின், அடுத்தடுத்த வாரங்களில் ஒவ்வொருவராக வெளியேறி 13 போட்டியாளர்கள் மட்டுமே மிஞ்சியுள்ளனர். கதிரவன், ராம், ஜனனி, ஏடிகே, அஸிம், ஆயிஷா ஆகியோர் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாமினீஸ்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நாட்கள் செல்ல செல்ல பிக்பாஸ் வீட்டில் நிலவி வரும் போட்டி கடினமாகி கொண்டே போகிறது. முதல் 60 நாட்கள் கடந்த நிலையிl, முதன் முறையாக இந்த வாரத்தில் இரு நபர்கள் வெளியேற்றப்படவுள்ளனர்.
கடந்த வாரம் குயின்சி வெளியாக, இந்த வாரம் வெளியாக போகும் அந்த இருநபர்கள் யார் என்ற கேள்வியுடன் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது பிக்பாஸ் சீசன் 6. அஸிமுக்கு முன்னதாகவே, அதிக ஓட்டுகள் இருப்பதால் அவர் இதில் முதலில் காப்பாற்றப்படுவார். இவருக்கு அடுத்த படியாக கதிரவனும், ஜனனியும் அதனால் இவர்கள் இருவரும் டபுள் எவிக்ஷனில் இருந்து காப்பாற்றப்பட்டு விடுவர்.
இதற்கு அடுத்த படியாக இருக்கும், ராம் மற்றும் ஆயிஷா உள்ளனர். இந்த நிலையில் ஆயிஷாவின் ரசிகர்கள் பலர் அவரை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். ஆயிஷா ஒரு சிறந்த போட்டியாளர் என்றும் அவர் உள்ளே இருக்க தகுதியானவர் என்றும் ட்வீட் செய்து அவருக்காக வாக்குகளை சேமித்து வருகின்றனர்.
ஆகையால் இவர்கள் இருவர் வெளியேற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.பிக்பாஸ் ரசிகர்களிடையே நிலவி வரும் இந்த சந்தேகத்திற்கான பதில் நாளை கிடைத்துவிடும்.இந்த வீட்டில் இருந்து இருவர் கிளம்பிய பின், வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளர் உள்ளே நுழைவர் என எதிர்ப்பார்ப்பு நிலவிவருகிறது.
எஞ்சிய போட்டியாளர்கள் :
இவர்கள் சென்ற பின், திருநங்கை ஷிவின் கணேசன், சீரியல் நடிகர் முகமது அஸிம், சீரியல் நடிகை ஆயிஷா, மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரச்சிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , அமுதவாணன், விஜே கதிரவன், டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன், ஜனனி மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 13 போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது