ஹிந்தி திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கோலிவுட்டின் முன்னனி நடிகைகளுள் ஒருவராக வலம் வரும் ஹன்சிகா மோத்வானிக்கு டிசம்பரில் திருமணம் நடைபெறவுள்ளதாக எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 


ஹன்சிகா மோத்வானி:


2011ஆம் ஆண்டு வெளியான மாப்பிள்ளை படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகிற்குள் என்ட்ரியான நடிகை ஹன்சிகா. இவர் நடித்த முதல் படம் எங்கேயும் காதல் என்றாலும், மாப்பிள்ளை படம் முதலில் வெளியானதால், அப்படம் மூலமாகவே அனைவராலும் அறியப்பட்டார். முதல் இரண்டு படங்களிலேயே, தனுஷ் மற்றும் ஜெயம் ரவி என முன்னனி நடிகர்களுடன் நடித்ததாலும், பப்ளி ஹீரோயினாக இருந்ததாலும் ஹன்சிகாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்த மான் கராத்தே திரைப்படம் மெகா-ஹிட் அடித்தது. இந்த பட ரிலீஸையடுத்து, ரசிகர்கள் மத்தியில் ‘யாழினி’யாகவும் பிரபலமானார். 


 






மும்பையை பிறப்பிடமாக கொண்ட இவர், முதன் முதலாக நடித்தது, 90’ஸ் குழந்தைகளுக்கு பிடித்த “ஷகலக்க பூம்பூம்” என்ற டெலிவிஷன் தொடரில்தான். இதில், குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த இவர், பருவ வயதையடைந்தவுடன் தமிழ், தெலுங்கு, கன்னடா என அனைத்து மொழி படங்களிலும் ஒரு கலக்கு கலக்கிவிட்டார். எந்தெந்த மொழி படங்களில் இவர் நடித்திருந்தாரோ, அத்தனை மொழிகளிலும் இவருக்கு ரசிகர்களும் பெரிய அளவில் உள்ளனர். சுந்தர் சி, சூரஜ், விஜய் சந்தர் என பல இயக்குனர்களுடனுடம் கை கோர்த்து வெற்றி படங்களை கொடுத்துள்ளார் ஹன்சிகா. 




டிசம்பரில் திருமணமா?


ஹன்சிகாவிற்கு டிசம்பர் மாதம் ராஜஸ்தானில் உள்ள முண்டாடோ கோட்டை,அரண்மனையில் திருமணம் நடைபெறவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இத்தகவலை ஹன்சிகா தரப்பு இன்னும் உறுதிப்படுத்தவில்லை. “ஹன்சிகாவிற்கு திருமணம்” என தகவல் பரவுவது இது முதல் முறையல்ல. வாலு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது தமிழ் நடிகர் சிம்புவும் ஹன்சிகாவும் காதலித்து வந்தனர். அப்போதும் கூட சிம்புவும் ஹன்சிகாவும் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் பரவியது. ஆனால், சிறிது நாட்களுக்குள்ளாகவே அவர்களுக்குள் காதல் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த திருமணப் பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கூட, அரசியல்வாதி மகன் ஒருவரை ஹன்சிகா திருமணம் செய்ய உள்ளதாக தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.