தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் பிரபல நடிகையாக விளங்கும் ஹன்சிகா மோத்வானி தனது நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான சோஹைல் கதுரியாவை கடந்த டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் இவர்கள் திருமணம் நடைபெற்ற நிலையில், கோலாகலமாக நடைபெற்ற இவர்களின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வந்தன.
நயன் - விக்னேஷ் திருமண வீடியோ :
சமீப காலமாக திரை பிரபலங்கள் தங்களின் திருமணத்தை பிரமாண்டமாக நடத்தி அதன் வீடியோவை ஓடிடி தளத்தில் வெளியிட்டு பெரும் அளவில் கல்லா கட்டுவதை வழக்கமாக்கி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டு நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற அதன் வீடியோ நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் இது வரையில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹன்சிகாவின் புதிய டீசர் :
இந்நிலையில், ஹன்சிகாவின் திருமண வைபவ நிகழ்வுகளை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் 'ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா' என்ற பெயரில் வெளியாகும் என ஏற்கனவே டீசர் வெளியான நிலையில் இதுவரையில் திருமண வீடியோ வெளியாகவில்லை. ஆனால் ஹன்சிகாவின் வீடியோ பிப்ரவரி 10ம் தேதி வெளியாகும் என புதிய டீசர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த புதிய டீசரில் ஹன்சிகா அழுது கொண்டே யாருடைய பழைய வாழ்க்கை பற்றியும் அவசியம் இல்லாமல் பேச கூடாது என கூறுவது போல இருக்கும் காட்சிகள் டீசரில் இடம்பெற்றுள்ளன.
ஹன்சிகா சொல்லும் மெசேஜ் :
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹன்சிகா - சிம்பு இடையே காதல் ஏற்பட்டதாகவும் பின்னர் அது பிரேக் அப் ஆனதாகவும் கூறப்பட்டது. அதே போல ஹன்சிகாவின் கணவர் சோஹைல் கதுரியாவிற்கும் ஹன்சிகாவின் தோழிக்கும் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று பின்னர் விவாகரத்து நடைபெற்றுள்ளது. விவாகரத்து ஆன பிறகு ஹன்சிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார் சோஹைல் கதுரியா என சோசியல் மீடியா எங்கும் ஏராளமான விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்கள் வெளியாகி வந்தன. எனவே இந்த ட்ரோல்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஹன்சிகாவின் பதிலடியாக வெளியாகியுள்ள இந்த புதிய டீசர் ஒரு த்ரில்லிங் ட்ராமாவாக ரசிகர்களை என்டர்டெயின் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரொம்ப பிஸி :
தற்போது ஹன்சிகா வெவ்வேறு மொழிகளில் ஏழு திரைப்படங்களில் நடித்து வருகிறார். அப்படங்கள் இந்த ஆண்டு வெளியாக உள்ளன. படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்து இறங்கிய ஹன்சிகாவிற்கு வரவேற்பு பலமாக இருந்து.