Idi Muzhakkam | சீனுராமசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்.. வெளியானது படத்தின் அப்டேட்

செண்டிமெண்ட் கதைகளுக்கு பெயர்போன சீனுராமசாமி இப்படத்தில் ஆக்‌ஷனிலும் கலக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Continues below advertisement

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் நடிக்கும் புதிய திரைப்படத்துக்கு இடி முழக்கம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

தமிழ் சினிமாவில் எதார்த்த சினிமாவை காட்சிப்படுத்துபவர் இயக்குநர் சீனு ராமசாமி. இவர் விஜய் சேதுபதியை வைத்து தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாசை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். 


செண்டிமெண்ட் கதைகளுக்கு பெயர்போன சீனுராமசாமி இப்படத்தில் ஆக்‌ஷனிலும் கலக்கியுள்ளதாக கூறப்படுகிறது. கொடைக்கானல் பகுதியில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படத்தின் தலைப்பு இன்று வெளியானது. நடிகர் விஜய் சேதுபதி படத்தலைப்பை வெளியிட்டார். படத்துக்கு இடி முழுக்கம் என பெயரிடப்பட்டுள்ளது. அவருக்கு பதிலளித்துள்ள ஜிவி பிரகாஷ் நன்று சகோதரா எனக் குறிப்பிட்டுள்ளார்.  திரையுலகைச் சேர்ந்த பலரும் இடி முழக்கம் திரைப்படத்துக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Continues below advertisement