இந்தியன் 2:


உலக நாயகன் கமல் ஹாசன், மனிஷா கொய்ராலா, கவுண்டமனி, கஸ்தூரி என பெரிய நட்சத்திரங்களின் நடிப்பில் 1996ஆம் ஆண்டு வெளிவந்த படம் இந்தியன். கமலின் நடிப்பில் எத்தனையோ படங்கள் வெளிவந்திருந்தாலும், இந்தியன் படத்திற்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதனால் தான் படம் வெளியாகி 26 ஆண்டுகளுக்கு பிறகும், இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் படக்குழு இறங்கியது.  இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கியது முதல், பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வண்ணம் இருந்தன. ஒரு வழியாக பஞ்சாயத்து அனைத்தும் ஓய்ந்த நிலையில் தற்போது படப்பிடிப்பை தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது. போனஸாக, ரெட் ஜெயின்ட மூவீஸ் உடன் இணைந்து நடிகர் உதயநிதி ஸ்டாலினும் இந்தியன் 2 படத்தை தயாரித்து வழங்க உள்ளார். இந்தியன் 2 படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் ஷங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கமல் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் அவரது போர்ஷன் சிறிது நாட்கள் கழித்து படமாக்கப்பட உள்ளது. 




நடிகர் விவேக்:


இந்தியன்2 படத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருந்தார். கமலுடன் இவர் நடிக்க இருந்த முதல் படம் என்பதால் ரசிகர்களும் விவேக்கின் நடிப்பை பெருமளவில் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இது திரையுலனருக்கும் அவரது ரசிகர்களுக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியன் 2 படத்தில் இவர் இடம் பெற்றிருந்த காட்சிகள் இன்னும் முடிக்கப்படாத நிலையில் இவரது கேரக்டரில் வேறு நடிகரை நடிக்க வைக்கும் முயற்சியில் படக்குழு ஈடுபட்டிருந்தது. இது குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. 


Also Read|Siruthai Siva: ஷூட்டிங் ஸ்பாட்ல இது வேண்டாமே.. அஜித் கோரிக்கையை அமல்படுத்திய ‘சிறுத்தை சிவா’






விவேக்கிற்கு பதில் இவரா?


நடிகர் விவேக்கிற்கு பதில் யாரை நடிக்க வைப்பது என்ற முயற்சியில் படக்குழு இறங்கியது. இந்நிலையில் அவரது ரோலில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. “யாருப்பா அந்த நடிகர்?” என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்க, “கிச்சான்னாளே இளிச்சவாயன் தானே..” என்று வந்து சர்ப்ரைஸ் கொடுக்கிறார் குரு சோம சுந்தரம். தமிழில், ஆரண்ய காண்டம் படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து ஜெய்பீம், ஜோக்கர், பேட்ட என பல படங்களில் புகுந்து விளையாடினார். விலங்கு சீரிஸில் கிச்சாவாக நடித்த இவரை ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்துப்போக, இவரை நோக்கி பட வாய்ப்புகள் வந்து கொண்டேயிருந்தன. 


தற்போது, இந்தியன் 2 படத்தில் விவேக் நடிக்கவிருந்த கதாப்பாத்திரத்தில் இவர் நடிக்கவுள்ளதால் படத்திற்கான எதிர்ப்பார்ப்பு மென்மேலும் அதிகரித்துள்ளது..