இயக்குநர் சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை ஒன்றை விடுத்து இருக்கிறார். 


இயக்குநர் சிவா குறிப்பிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ திரைப்பட படப்பிடிப்பு நடக்கும் வெளிப்புற மற்றும் ஸ்டுடியோ தளங்களில் சுற்றுசூழலுக்கு இணக்கமான ஒலி மாசு அற்ற பகுதியாக மாற்ற நாம் உறுதி ஏற்போம். அதை சாத்தியப்படுத்த அதிக சத்தம் எழுப்பும் ஒலி எழுப்பும் ஒலி எழுப்பிகளை படப்பிடிப்பு தளங்களில் தவிர்த்து படக்குழுவினருக்கும் பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்படாமல் காப்போம்” என்று பதிவிட்டு இருக்கிறார்.     


 






முன்னதாக இயக்குநர் விக்னேஷ் சிவனும் சுற்றுசூழலில் தேவையற்ற  சத்தத்தை தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பாக படப்பிடிப்பு தளத்தில் அதிகப்படியாக சத்தத்தை எழுப்பும் கருவிகள், மற்றும் பொருட்களை குறைப்பதற்கும், தவிர்ப்பதிற்கும் போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். 


 






ரசிகர்கள் ஆர்வம் மிகுதியால் ஏதாவது செய்யும் போது கண்டிக்கும் அஜித் அவ்வப்போது அவர்களுக்கு அறிவுரைகளையும் வழங்குவார். அந்த வகையில் அண்மையில் தனது மேனஜர் சுரேஷ் சந்திரா மூலம் அவர் ஒரு அறிவுரையை வழங்கி இருந்தார். அந்த வகையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் டின்னிடஸ் தொடர்பான குறிப்பு அடங்கிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு “உங்கள் காதுகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” நிபந்தனையற்ற அன்பு எப்போதும் - அஜித்” என குறிப்பிட்டு இருந்தார். அது தொடர்பாக அவரிடம் சுரேஷ் சந்திராவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, தன்னிடம் அஜித் இந்த பாதிப்பு குறித்து தகவலை சொன்னதாகவும், இதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதால் இத்தகைய பதிவை வெளியிட்டதாகவும் அவர் தெரிவித்தார். 


 






சிறுத்தை, வீரம்,வேதாளம்,விவேகம்,விஸ்வாசம், அண்ணாத்த ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கமர்ஷியல் இயக்குநராக மாறியுள்ள சிவா தான் சூர்யாவின் அடுத்தப் படத்தை இயக்கப் போகிறார். பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயினாக நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.இந்நிலையில் சூர்யா 42 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பூஜை நடந்த அன்று இயக்குநர் சிவா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோரோடு எடுக்கப்பட்ட புகைப்படத்தோடு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


 


 


Car loan Information:

Calculate Car Loan EMI