இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் நடிகர் கார்த்தி இதுவரை ஏற்காத வித்தியாசமான வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை, 'குக்கூ', 'ஜோக்கர்', 'ஜிப்ஸி' ஆகிய படத்தை இயக்கிய இயக்குவர் ராஜு முருகன் இயக்குகிறார். இதில் நடிகர் கார்த்தி நாயகனாக நடிக்கிறார்.
புதிய கதாபாத்திரம்
இதுவரை கார்த்தி ஏற்காத புதிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், இதற்கான ஒத்திகை மற்றும் பயிற்சியில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்தப்படம் குறித்து விருமன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருந்த இயக்குநர் ராஜூமுருகன் “என்னோட கதை சொல்றதுக்காக நான் கார்த்தி சார சந்திக்க தேனி போயிருந்தேன். ஒரு கதை அதன் சனங்களை பற்றி பேசும் போது முக்கியத்துவம் பெற்றதாக மாறுகிறது. கார்த்தியோட அடுத்தப்படம் பண்ணப்போறேன். அந்தப்படம் சினிமாவில் எனக்கு லெர்னிங் ப்ராசஸா இருக்கும். அவர்கிட்ட நிறைய கத்துக்கிறேன். எப்போது ஃபுல் சார்ஜ் போட்ட பேட்டரி மாதிரி இருப்பாரு. அவர் பின்னாடி ஓடுறது ரொம்ப பெரிய டாஸ்க். சமூகத்திற்கு தேவையான உழவன் அறக்கட்டளை மூலம் நல்ல விஷயங்களை செய்யும் நல்ல மனிதர். அவரோட அடுத்தப்படத்தில் இணைவது பெருமையாக இருக்கு” என்று பேசினார்.
பொன்னியின் செல்வன் டூப் இல்லாமல் நடித்த கார்த்தி
மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப்படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடிக்கிறது. இந்தப்படத்தில் வந்திய தேவன் கதாபாத்திரத்தில் நடிக்கும் கார்த்தி, படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சியில் டூப் இல்லாமல் நிஜமாகவே நடித்து பட குழுவினரின் பாராட்டை பெற்றிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பொன்னியின் செல்வன் டீசர் வெளியிட்டு விழா கடந்த ஜூலை 8 ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் பிரமாண்டமாக நடைபெற்றது. ஐமேக்ஸ் ஒலி அமைப்பில் உருவாகி வரும் இந்தப்படத்தில் இருந்து ‘பொன்னி நதி’ மற்றும் ‘சோழா சோழா’ பாடல்கள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.