தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, உலக அளவில் 400 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இதனையடுத்து விபத்து, ஷங்கருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் உள்ளிட்டவற்றால் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது.
உதயநிதி தலையிட்டு பஞ்சாயத்தை முடித்து வைத்த நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதனிடையே திருமணம் செய்துகொண்டு கர்ப்பமான காஜல் அகர்வால் மீண்டும் இந்தியன் 2-இல் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது.
அந்த கேள்விக்கு பதிலளித்த அவர், தான் மீண்டும் இந்தியன் 2 நடிப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார். இவர்களுடன் நடிகை ரகுல் ப்ரீத் சிங், பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் அப்பாவான யோகராஜ் சிங், பிரியா பவானி ஷங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்தியன் 2 வில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த வரிசையில் தற்போது பாலிவுட்டில் வில்லன் ரோல்களில் நடித்து பிரபலமான நடிகர் குல்ஷன் குரோவர் இந்தியன் 2 படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கமலுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கும் அவர், “ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் இணைந்து இருப்பது உற்சாகத்தை அளித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்
முன்னதாக இருமல், சளி காரணமாக சென்னை ஸ்ரீ ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கமல்ஹாசன் நேற்று வீடு திரும்பினார். திரும்பிய கையோடு விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் டிஎஸ்பி இசை வெளியீட்டு விழாவிலும் பங்கேற்றார்.