ஜி.பி.முத்து பிக்பாஸ் போகிறார்... ஆடி கார் வாங்கினார்... ஆஹா ஆகிறார்... ஓஹோ ஆகிறார்... என்றெல்லாம் தகவல்கள் உலா வந்த நிலையில், நேற்றோடு ஜி.பி.முத்துவின் பிக்பாஸ் நுழைவு இல்லை என்பது உறுதியானது. ஜி.பி.முத்து போலவே பேசும் இமான் அண்ணாச்சி, பிக்பாஸ் வீட்டில் நுழைந்தது தான் கடைசி நேர ட்விஸ்ட். எந்த வீட்டுக்கு போனாலும், போகாமல் போனாலும் வீடு தேடி மொபைல் போன் வழியே ஊடுருவி வரும் ஜி.பி.முத்துவின் கலாட்டாக்கள் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. அந்த வகையில் இயக்குனர் சக்தி சிதம்பரத்தின் பேய் மாமா படம் ரீலிஸ் ஆனதும், அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வந்த ஜிபி முத்து, அவருடன் சேர்ந்து அந்த படத்தில் நடித்த நடிகர்களை பிராங்க் செய்ய முயற்சித்தார். அதில் முதலாவதாக படத்தில் நடித்த இமான் அண்ணாச்சிக்கு போன் செய்தார் ஜி.பி.முத்து... இதோ... அவர்களின் உரையாடல்...
ஜி.பி.முத்து: உங்க படம் பேய் மாமா பார்த்தேன் நல்லா இருந்துச்சு.
இமான் அண்ணாச்சி: ஓ... அப்படியா... சூப்பர் சூப்பர்!
ஜி.பி.முத்து: ஆமாண்ணே... எனக்கு ஒரு உதவி வேணும்....!
இமான் அண்ணாச்சி: ம்... சொல்லுங்கண்ணே...!
ஜி.பி.முத்து: என் தம்பி மணிக்கு பேய் பிடிச்சிருக்கு... கொஞ்சம் பேய் ஓட்டணும்ணே...!
இமான் அண்ணாச்சி: என்னது... பேய் ஓட்டணுமா...ஹலோ யாரு நீங்க... எங்கேயோ கேட்ட குரலா இருக்கு!
ஜி.பி.முத்து: அண்ணாச்சி... ரொம்ப சங்கடப்படுறான்... தம்பிக்கு பேய் ஓட்டணும்... அவனை கூட்டிட்டு வரட்டுமா!
இமான் அண்ணாச்சி: ஏய்... ஜிபி முத்தா...
ஜி.பி.முத்து: அண்ணாச்சி கண்டுபிடிச்சிட்டீங்களே...?
இமான் அண்ணாச்சி: ஜிபிமுத்து நல்லா இருக்கீங்களா... பிக்பாஸ் போறீங்களா?
ஜி.பி.முத்து: இல்ல... இல்ல... போகல அண்ணாச்சி... உங்க படம் பார்த்தேன்... நல்லா இருந்துச்சு!
(உண்மையில் அந்த நொடியில் இமான் அண்ணாச்சி தான் பிக்பாஸ் போவதற்கு தயாராக, தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்)
இவ்வாறாக அவர்களின் உரையாடல் முடிந்தது. பின்னர் யோகிபாபு மற்றும் நடிகை ரேகா, மொட்டை ராஜாந்திரன் ஆகியோருக்கும் போன் செய்து ப்ராங்க் செய்தார் ஜி.பி.முத்து.
அப்போது முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான நடிகை ராதா, ‛ஜிபி முத்துவிடம் பிக்பாஸ் போகிறீர்களா...’ என்று கேட்டார். அதற்கு ஜி.பி.முத்து, ‛இல்லை மேடம்... எனக்கு பிள்ளைகளை பார்க்காமல் இருக்க முடியாது... அதான் நான் போகல’ என்றார்.
இயக்குனர் சக்தி சிதம்பரம், ஜி.பி.முத்துவின் பக்கத்து ஊர்காரர் என்பதால் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது, பேய் மாமா இரண்டாம் பாகம் எடுக்கப் போவதாகவும், அதில் ஜிபி முத்து நடிக்கப் போவதாகவும் சக்தி சிதம்பம் தெரிவித்தார்.
இதோ ஜிபிமுத்து ப்ராங்க் செய்த வீடியோ: