மரக்கடை அதிபரான ஜிபி முத்து டிக்டாக்கில் வீடியோக்களை  வெளியிட்டு பிரபலமடைந்தார். அந்த பிரபலத்தின் மூலமாக, சினிமா வாய்ப்புகள் வர, அந்த வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்த தொடங்கினார். இந்த நிலையில்தான், Twin throttlers என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் கோவையை சேர்ந்த  TTF வாசன் என்ற இளைஞரின் பைக்கில் சென்றார்.   TTF வாசன் அதிவேகமாக செல்ல, பின்னால் இருந்த ஜிபிமுத்து பயந்து நடுங்கி வேகமாக செல்ல வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தார். இது தொடர்பான வீடியோ சமூவலைதளங்களில் வெளியாகி வைரலானது. இது தொடர்பாக  TTF வாசன்  மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.


 






இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து ஜிபி முத்து பேசியிருக்கிறார். கோவையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து, “இதுவரை  நான் யாருடனும் அது போன்ற வேகத்தில் சென்றதில்லை. இந்த சம்பவத்திற்கு பிறகு இனிமேல் யாருடனும் அப்படி செல்ல மாட்டேன்” என்றார்.


மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது குறித்து பேசிய அவர், “ எனது மகனுக்கு உடல் நிலை சரியில்லை அதுதான் காரணம். அவனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நான் அவனை மருத்துவமனையில் காண்பித்து இருந்தேன். அப்போதுதான் எனக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. அதனால் நான் அப்படியே வந்து விட்டேன். அதனால் உள்ளே இருந்த எனக்கு மகன் உடல்நிலை குறித்த கவலை தொடர்ந்து இருந்தது. அதனால்தான் நான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தேன். இப்போது அவன் நன்றாக இருக்கிறான். பிக்பாஸ் அனுபவம் எனக்கு புதுவிதமாக இருந்தது. கமல்ஹாசனை சந்தித்தது எனக்கு கிடைத்த பாக்கியம். தற்போது ஐந்து திரைப்படங்களில் நடித்து வருகிறேன். நடிகை சன்னி லியோனுடன் திரைப்படத்தில் நடித்தது எனக்கு மகிழ்ச்சி. நான் அவரைப் பார்த்து ஐ லவ் யூ சொன்ன உடன் அவர் தன்னை பார்த்து க்யூட் என கூறிய போது நான் சிலிர்த்து போனேன்.” என்று பேசினார்