பரிதாபங்கள் யூடியும் சேனல் மீது வழக்கு 

நெல்லையில் நடந்த கவின் குமார் ஆணவக்கொலையைத் தொடர்ந்து பரிதாபங்கள் யூடியுப் சேனலில் சொசைட்டி பரிதாபங்கள் என்கிற வீடியோ வெளியானது. சுய சாதி பெருமை பேசுபவர்களை பகடி செய்யும் விதமாக இந்த வீடியோ இருந்தது. பலர் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கோபி சுதாகரை பாராட்டினர். முன்னணி நடிகர்களே பேச துணியாததை தங்கள் வீடியோவில் கோபி சுதாகர் பேசியது பாராட்டிற்குரியது. 

அதே நேரம் இந்த வீடியோவை சாதி ஆதரவாளர்கள் கடுமையாக கண்டித்தும் வருகிறார். திரைப்பட தயாரிப்பாளர் ஏ.எம் செளதரி கோபி சுதாகர் வீடியோவை கண்டித்து வீடியோ வெளியிட்டிருந்தார். இப்படியான நிலையில் கோயம்புத்தூரில் தனுஷ்கோடி என்கிற வழக்கறிஞ்சர் கோபி சுதாகர் யூடியுப் சேனல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். 

கோபி சுதாகருக்கு ஆதரவு

நெல்லையில் கவின் குமார் சுர்ஜித் என்பவரால் ஆணவப்படுகொலை செய்தபோது ஒட்டுமொத்த திரையுலகமே மெளனம் காத்தது .பல முன்னணி நடிகர்களே மெளனம் காத்தனர். சோஷியல் பரிதாபங்கள் என்ற பெயரில் வெளியான இந்த வீடியோவில் சாதி வெறியர்களால் இளைஞர்கள் எவ்வாறு மூளைச்சலவை செய்ப்படுகிறார்கள். சாதி ரீதியாக ஆணவப்படுகொலை செய்பவர்களை கண்டிக்கும் விதமாக அமைந்தது. குறிப்பாக சாதியை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு சாட்டையடி கொடுக்கும் வகையில் கன்டென்ட் தரமானதாக இருந்தது என பலரும் பாராட்டினர். கவின் கொலையை வெளிப்படையாக பேசியிருந்தனர். மேலும், படித்த இளைஞர்களை சாதியவாதிகள் எப்படி கொலையாளியாக மாற்றுகிறார்கள் என்பதையும் மிகவும் தத்ரூபமாக கோபி - சுதாகர் காட்சிப்படுத்தியிருந்தனர். 

'மொளகா பொடியை எடுத்து முஞ்சில அடிச்சு முதுகுல குத்தியிருக்கு மூதேவி, இதுக்கு வீரம்னு பில்டப் வேற “ என்று கோபியின் வார்த்தைகள் கைதட்டல்களை பெற்றது. பெரும்பாலான மக்களின் மன எண்ணங்களை வார்த்தைகளாக மாற்றியதுதான் இந்த வீடியோ இரண்டே நாட்களில் 41 லட்சம் பார்வையாளர்களை சென்றதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.