தமிழ் சினிமாவில் தனக்கென தனிப்பாதை அமைத்து வெற்றிப்பாதையில் பயணித்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித், சினிமாவை தாண்டி ரேசிங்கில் அதிக ஆர்வம் கொண்டவர் அஜித். இதற்காக அஜித் குமார் ரேசிங் என்கிற கார் பந்தய நிறுனத்தை தொடங்கி கார் ரேசிங்கில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறார். 

அஜித் குமார் ரேசிங்:

உலகம் முழுவதும் நடைப்பெறு பல்வேறு கார் பந்தயங்களில் கலந்து கொண்டு அசத்தி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் துபாயில் நடந்த 24 மணி நேர கார் ரேசில் கலந்துக்கொண்டு மூன்றாவது இடமும் பிடித்தார். தற்போது ஐரோப்பிய கார் தொடரில் பங்கேற்று வருகிறார் அஜித் குமார். இதற்கிடையில் ரசிகர்களுக்காக விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களும் வெளியாகி ஹிட் அடித்தன. 

ஆசிய லீ மான்ஸ் தொடர்:

ஐரோப்பிய கார் ரேசிங் தொடர் முடிந்தவுடன் ஆசிய லீ மான்ஸ் தொடரானது தொடங்கவுள்ளது. இதற்காக அஜித் குமார் அணியில் இந்தியாவின் முதல் F1 கார் டிரைவரும், தமிழ்நாட்டை சேர்ந்த்  கார் ரேசருமான நரேன் கார்த்திக்கேயன் அஜித் குமார் ரேசிங் இணைவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சுரேஷ் சந்திரா பதிவு:

இது குறித்து அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா தனது எக்ஸ்-ல் பதிவிட்டுள்ளதாவது  ”நரேன் அணியில் இணைவது உண்மையிலேயே ஒரு பாக்கியம். அவருடன் இணைந்து பந்தயம் கட்டுவது ஒரு மரியாதை. நரேனுடன், இந்த ஆசிய லீ மான்ஸ் தொடர் நம் அனைவருக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்தது." என்று அஜித் குமார் தெரிவித்துள்ளார். 

மேலும் நரேன் கார்த்திகேயனும் அஜித்துடன் "எனக்கு அஜித்தை பல வருடங்களாகத் தெரியும், இப்போது அவர் தொழில்முறை மட்டத்தில் கார்களைப் பந்தயத்தில் ஈடுபடுவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வரவிருக்கும் ஆசிய லீ மான்ஸ் தொடரில் அவருடன்  சேருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.