பரிதாபங்கள் யூடியூப் சேனல்
தமிழ் யூடியூப் சேனல்களில் பெரியளவில் ரசிகர்களைக் கொண்ட சேனல் பரிதாபங்கள். கோபி , சுதாகர் இருவரும் இந்த சேனலில் பிரதானமாக வீடியோக்களில் நடித்து வருகிறார்கள். அன்றாடம் நம் வாழ்க்கையில் , குடும்பத்தில் , அரசியலில் நடக்கும் பல விஷயங்களை பகடி செய்து வீடியோக்களாக வெளியீட்டு வருகிறார்கள். மாமியார் பரிதாபங்கள் , இ.எம்.ஐ பரிதாபங்கள் , பிஸ்னஸ் பரிதாபங்கள் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். பெரிய செட் , வி,எஃப்.எக்ஸ் என எதுவும் இல்லாமல் எல்லா தரப்பு ரசிகர்களுடனும் தொடர்புபடுத்திக் கொள்ளும் வீடியோக்களை வெளியிடுவதால் இவர்களுக்கு பெரிய ஆதரவு இருந்து வருகிறது. பரிதாபங்கள் சேனலின் மாத வருமாணம் மற்றும் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கின்றன.
பரிதாபங்கள் மாத வருமாணம்
பரிதாபங்கள் சேனலுக்கு மொத்தம் 6 மில்லியன் அதாவது 60 லட்சம் சப்ஸ்க்ரைபர்ஸ் உள்ளார்கள். 2018 ஆம் தொடங்கப்பட்ட இந்த சேனலில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்களை வெளியிட்டுள்ளார்கள். இந்த வீடியோக்கள் இதுவரை 1,740,858,851 பார்வையாளர்களை எட்டியிருக்கின்றன.
பரிதாபங்கள் சேனலின் சராசரி மாத வருமானம் சராசரியாக 27.7 ஆயிரம் டாலர்கள் அதாவது 24 லட்சத்து 16 ஆயிரம் என கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் 26 லட்சம் வருமானம் ஈட்டியுள்ளது. பரிதாபங்கள் சேனலின் மொத்த சொத்து மதிப்பு 18 கோடி, 39 லட்சத்து 99 ஆயிரம் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க : Nitanshi Goel : டாப் பாலிவுட் நடிகைகளை ஓரம்கட்டி விருதை தட்டிச்சென்ற 17 வயது நடிகை...
Flashback : ஒரு காட்சிக்காக அஜித்திடம் கெஞ்சிய மாரிமுத்து...முடியவே முடியாதுனு சொன்ன அஜித்