Just In

"ஆறு, ஏழு கதைகள் இருக்கு, இயக்குனர்கள் கதை கேட்டால் நிச்சயமாக அதை கொடுப்பேன்" -நடிகர் சூரி

அப்துல் கலாமாக நடிக்கும் தனுஷ்...ஐயையோ இந்த டைரக்டரா !

டாஸ்மாக் ஊழலில் சிக்கிய டிராகன் பட நடிகை..? ஒரு நைட் பார்ட்டிக்கு லட்சத்தில் சம்பளமா?

இன்னொரு பெண் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் - சமந்தாவை எச்சரித்த ராஜ் நிடிமொரு மனைவி!

ஆர்த்திக்கு பணம் தான் டார்க்கெட்டா? ரவி மோகன் சொன்னது உண்மை தான் போல – ஆர்த்தியை விளாசும் நெட்டிசன்கள்!
கேட்ட கேள்வியில் ஸ்ருதி நாராயணன் மூஞ்சி தொங்கிய போச்சு! கடுக்கா பட விழாவில் நேர்ந்த மோசமான சம்பவம்!
Karuppar Nagaram Title: ”இது எங்க நிலம் விட்டுப்போக மாட்டோம்” .. எதிர்பார்ப்பை எகிற செய்யும் கருப்பர் நகரம் டீசர்..!
கோபி நயினார் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் ’கருப்பர் நகரம்’ படத்தின் டைட்டில் வெளியானது.
Continues below advertisement

கருப்பர் நகரம் டிரெய்லர்
Karuppar Nagaram Title: கோபி நயினார் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் புதிய படத்துக்கு ‘கருப்பர் நகரம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
2017ம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த அறம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஹீரோயினுக்கு லீட் ரோல் கொடுத்த அறம் படம் வசூலிலும் சாதனை படைத்தது. அறம் படத்திற்கு பிறகு நயன்தாரா சோலோ ஃபர்மான்சில் கலக்கி லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். தண்ணீர் பஞ்சமுள்ள கிராமத்தில் இருக்கும் போர்வெல்லில் விழுந்த குழந்தையை காப்பாற்றும் மாவட்ட ஆட்சியராக நயன்தாரா நடித்துள்ளார். அவரின் உணர்வுப்பூர்வமான நடிப்பு படத்தை கொண்டாட வைத்தது.
அறம் படத்தை தொடர்ந்து ஆன்ட்ரியா நடித்த மனுஷி படத்தை கோபி நயினார் இயக்கி இருந்தார். இந்த படம் வெற்றிமாறனுக்கு சொந்தமான க்ராஸ் ரூட் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் கோபி நயினார் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியானது. படத்துக்கு ’கருப்பர் நகரம்’ என டைட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில், ஜெய்யுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், ஜேடி சக்கரவர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். கருப்பர் நகரம் படத்தின் டைட்டிலை இயக்குநர் வெங்கட்பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று கருப்பர் நகரம் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ”மண்குடிசை வாசல் என்றால் தென்றல் வர தடுத்திடுமா...? இது எங்க இடம், எங்க நிலம் விட்டு போகமாட்டோம். வருங்காலத்தில ஜெயிப்போம்...உடம்புல ரத்தம் சூடா இருக்கற வரைக்கும் தான் சண்டை செய்ய முடியும்” போன்ற பாடல் வரிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதற்கெல்லாம் மேலாக அமைதியாக இருக்கும் ஜெய் ஆக்ஷனில் இறங்குகிறார்.
கோபி நயினார் இயக்கிய அறம் படம் அரசின் அலட்சியத்தை சாட்டையடியாய் கூறியது. தற்போது வெளிவர இருக்கும் கருப்பர் கூட்டம் படம், ஒடுக்கப்பட்ட மக்களின் நிலத்தின் மீதான உரிமையை கூறும் என்று டிரெய்லரில் தெரிகிறது.
மேலும் படிக்க: Salaar Trailer: கேஜிஎஃப் ரசிகர்கள் அடுத்த சம்பவத்துக்கு தயாராகுங்க.. பிரபாஸின் ‘சலார்’ ட்ரெய்லர் ரிலீஸ் தேதி இதுதான்!
Continues below advertisement
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.