2022ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலில் விக்ரம், காந்தாரா, காஷ்மீரி ஃபைல்ஸ், புஷ்பா படங்கள் இடம் பெற்று சாதனை படைத்துள்ளன.


2022ஆம் ஆண்டின் இறுதிக்கட்டத்தை நாம் எட்டியுள்ள நிலையில் ஆண்டு முழுவதும் இணையத்தில் ரசிக்கப்பட்ட படங்கள், பாடல்களின் பட்டியல்கள் பகிரப்பட்டு வருகின்றன.


அந்த வகையில், இந்தியாவில் இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியல் முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது. 


இதில் கோலிவுட்டின் விக்ரம் படம், கேஜிஎஃப், காந்தாரா ஆகிய கன்னட மொழிப் படங்களும், ஆர்.ஆர்.ஆர், புஷ்பா ஆகிய தெலுங்கு படங்களும், மலையாளப் படமான த்ரிஷ்யமும் இடம்பெற்றுள்ளன.


 






இந்தி படங்களான பிரம்மாஸ்திரா, த காஷ்மீர் ஃபைல்ஸ், லால் சிங் சத்தா ஆகிய படங்களும், ஹாலிவுட் படமான தோர் த லவ் அண்ட் தண்டர் படமும் இடம்பெற்றுள்ளன.


பொதுவாக இந்தி படங்கள் தான் இந்தியாவின் பிரதான மக்கள் பார்க்கும் படங்கள் எனும் பிம்பத்தை உடைக்கும் வகையில், ஆறு தென்னிந்தியப் படங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.


 






அதே போல் மலேசியா நாட்டிலும் கூகுளின் அதிகம் தேடப்பட்ட படங்கள் பட்டியலில் விக்ரம் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது. மலேசியாவின் டாப் 10 படங்களின் லிஸ்டில் இடம் பிடித்த ஒரே இந்தியப் படம் ’விக்ரம்’ என்பது குறிப்பிடத்தக்கது.