Himachal Results 2022: இமாச்சல பிரதேசத்தில் கடும் போட்டி... கனவை எட்டிப்பிடிக்குமா காங்கிரஸ்..? நடக்கபோவது என்ன?

ஏபிபி நியூஸ்- சி வோட்டர் கருத்து கணிப்பு முடிவுகளின்படி, பாஜக 33 முதல் 41 இடங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முந்தைய சட்டமன்றத் தேர்தலில் வென்ற 44 இடங்களை விட குறைவானதாகும்.

Continues below advertisement

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் 2023ம் ஆண்டு, ஜனவரி 8ம் தேதியோடு நிறைவடைய உள்ளது. இதை தொடர்ந்து, அம்மாநிலத்தில் கடந்த மாதம் நவம்பர் 12 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது.

Continues below advertisement

இமாச்சலை பொறுத்தவரை, 1985க்கு பிறகு, பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகின்றன. ஆனால், இந்த முறை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் 5 முறை இமாச்சலின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தவருமான வீரபத்ர சிங் மறைவின் காரணமாக, அந்த போக்கு மாறும் என கூறப்படுகிறது.

அதற்கு ஏற்றார்போல, இமாச்சல் பிரதேச தேர்தல் முடிவுகளுக்கான கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. ஏபிபி நியூஸ்- சி வோட்டர் கருத்து கணிப்பு முடிவுகளின்படி, பாஜக 33 முதல் 41 இடங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முந்தைய சட்டமன்றத் தேர்தலில் வென்ற 44 இடங்களை விட குறைவானதாகும்.

அதேபோல, காங்கிரஸ் கட்சி 24 முதல் 32 இடங்களை வெல்லும் என்று கணித்துள்ளது. ஏபிபி நியூஸ்-சி வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவின்படி , புதிய வரவான ஆம் ஆத்மி, ஒரு இடங்களில் கூட வெற்றி பெறாது என கூறப்படுகிறது.

வாக்கு சதவிகித்தை பொறுத்தவரை, ஏபிபி-சி வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவின்படி பாஜக 44.9 சதவீத வாக்குகளைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது 2017 தேர்தலில் பெற்றதை விட 3.9 சதவீதம் குறைவாகும். 

அதேபோல, காங்கிரஸ் 41.1 சதவீத வாக்குகளைப் பெறும் என்று கணித்துள்ளது, இது 2017 தேர்தலில் பெற்றதை விட 0.6 சதவீதம் குறைவாகும். ஆம் ஆத்மி கட்சியானது 2.1 சதவீத வாக்குகளைப் பெறும் என்று ஏபிபி-சி வோட்டர் கணித்தது.

வீரபத்ர சிங் மறைவை தொடர்ந்து, அவரின் மனைவி பிரதிபா வீரபத்ர சிங்கை இமாச்சல பிரதசே மாநிலத்தின் காங்கிரஸ் தலைவராக அக்கட்சி நியமத்தது. இந்த முடிவு, இன்றைய முடிவுகளில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வெளியான பெரும்பாலான கருத்துகணிப்புகளில், இமாச்சல பிரதேசத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவும் என்றே தெரிவிக்கப்பட்டிருந்தது. நவம்பர் 12ஆம் தேதி நடத்தப்பட்ட தேர்தலில் 65.92 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்ததாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இச்சூழலில், தேர்தல் முடிவுகள், இன்று வெளியிடப்பட்டு வருகிறது. அதில், பாஜக, காங்கிரஸ் மாறி மாறி முன்னிலை வகித்து வருகிறது. 34 இடங்களில் பாஜகவும் 31 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை வகித்து வருகிறது. மற்ற கட்சிகள், 3 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

Continues below advertisement